கோழிக் குருமாவால் சர்ச்சையில் சிக்கியிருக்கும் ஆஸ்திரேலியப் பிரதமர்

ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison) தமது Facebook பதிவால் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

“Strong Curry.Strong Economy. Stronger Future” (காரசாரமான கறி, உறுதியான பொருளியல், வலுவான எதிர்காலம்) என்று கூறும் பதிவில் திரு மோரிசன் தமது உணவு என்று கூறி ஒரு படத்தை வெளியிட்டிருக்கிறார்.

அதில் இலங்கை பாணியில் புளியுடன் சேர்த்து சமைக்கப்பட்ட கத்தரிக்காய், சோறு, கோழிக் குருமா மூன்றும் உள்ளது.

குருமாவில் காணப்படும் கோழித் துண்டுகள் சமைக்காத கோழி போல் காணப்படுகின்றன. இதை உடனடியாகக் கண்டுபிடித்து கருத்துத் தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர் இணையவாசிகள்.

எண்ணாயிரத்துக்கும் அதிகமான கருத்துகள் பதிவாகியுள்ளன. அதில் பலர் பிரதமர் சமைக்காத கோழியைச் சாப்பிடுவது குறித்துக் கேலியாக அக்கறை தெரிவித்துள்ளனர்.

“இளஞ்சிவப்பாக இருக்கும் சமைக்காத கோழியைச் சாப்பிட்டு சால்மோனெல்லா தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறோம்”

“நல்லவேளை பிரதமர் மருத்துவமனையில் இல்லை.”

இப்படிப்பட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டாலும் திரு மோரிசன் அசரவில்லை.

“உறுதியாகச் சொல்வேன் குருமாவில் இருந்த கோழி சமைக்கப்பட்டது.” என்று அவர் கூறியிருக்கிறார்.

அவரது பதிவில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இந்த மாதம் 21ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் பொதுத்தேர்தல். அதில் திரு. மோரிசனின் கட்சி கடுமையான போட்டியை எதிர்கொள்ளவிருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *