உக்ரேன் போர் ஹீரோவாகப் போற்றப்பட்ட ‘கீவின் பேய்’ வெறும் கட்டுக்கதை

போர் ஹீரோவாகப் போற்றப்பட்ட ‘கீவின் பேய்’ எனும் ராணுவ வீரர் வெறும் கட்டுக்கதை என்று உக்ரேன் ஒப்புக்கொண்டுள்ளது.

‘கீவின் பேய்’ குறித்த வீரரின் கதைகள் உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரின் தொடக்கத்தில் பரவ ஆரம்பித்தன.

வீரர் ரஷ்யாவின் பல்வேறு விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதன் தொடர்பில் கதைகள் அமைந்திருந்தன.

வீரரின் செயல்கள் குறித்துப் படங்களும் காணொளிகளும் வெளியிடப்பட்டன.

உக்ரேனிய அதிகாரிகளும் அத்தகைய படங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

‘கீவின் பேய்’ உக்ரேனிய மக்களின் மனங்களில் ‘ஹீரோவாகப்’ பதிந்துவிட்டார்.

அவர் உண்மையில் மார்ச் மாதம் 13-ஆம் தேதி ஆகாயத் தாக்குதலில் மாண்ட மேஜர் Stepan Tarabalka என்று எண்ணப்பட்டது.

அவருக்கு ‘உக்ரேனின் ஹீரோ’ என்ற பட்டம் உண்மையில் சூட்டப்பட்டிருந்தது.

இருப்பினும், ‘கீவின் பேய்’ அவர் இல்லை என்றும் அது வெறும் கட்டுக்கதை என்றும் உக்ரேன் ஒப்புக்கொண்டுள்ளது.

‘கீவின் பேய்’ என்பது ஆகாயப் படை வீரர்களை மொத்தத்தில் குறிப்பதாகவும் அது மக்களால் உருவாக்கப்பட்டது என்றும் அதிகாரிகள் கூறினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *