படுத்து தூங்க இவ்வளவு சம்பளமா? ஆனா ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் தான்…

நாம் எல்லோரும் தினமும் காலை எழுந்து உழைக்க துவங்கி மாலை வரை உழைத்து கலைப்பது எல்லாம் பணம் சம்பாதிக்க தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வேலை கிடைக்கும். சிலருக்கு பிடித்தமான வேலை கிடைக்கும் பலருக்கு பிடிக்காத வேலைதான் கிடைக்கும். ப்படியாக ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு விதமாக அமையும்.

இந்நிலையில் மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைகழகத்தில் உள்ள ஆய்வாளர்கள் சமீபத்தில் ஒரு வேலைக்கு ஆட்களை எடுத்தனர். அந்த ஆள் எந்த வேலையும் செய்ய வேண்டியது இல்லை. அவருக்கு தனியாக எந்த அறிவும் தேவைப்படுவது இல்லை. அவர் படுத்து தூங்கினால் மட்டும் போது அவருக்கு மாதம் 1500 வெள்ளி அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ26500 பணம் கொடுக்கப்படும். என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஒருவருக்கு இருக்க வேண்டிய தகுதி அவர் 20-40 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். சராசரி உடல் எடையுடன், தூங்குவதில் எந்த சிரமமும் இல்லாதவராக இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

மேலும் இந்த வேலைக்கு ஆளை தேர்வு செய்யும் முன்பு ஒரு மாத காலம் அவர் தூங்கும் போது கண்காணிக்கப்படுவார். அப்பொழுது அவருக்கு தூங்குவதில் ஏதாவது சிரமம் இருப்பது தெரிந்தால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் ஸ்லீப்பிங் ஹவுஸ் உள்ளே அனுமதிக்கப்டுவடர்.

அங்கு ஒரு மாதம் காலம் அவர் தூங்க வேண்டும் அவருக்கே சம்பளம் வழங்கப்படும். இந்த செய்தியை படித்ததும் அட இந்த ஆஃபர் நன்றாக இருக்கிறதே தூங்கினால் சம்பளமா என உங்கள் மனதின் குரல் பேசுவது எங்களுக்கு கேட்கிறது. ஆனால் இதில் துரதிஷ்டவசமான செய்தி என்னவென்றால் இந்த வேலைக்காக விண்ணப்பிக்கும் தேதி கடந்துவிட்டது. ஏற்கனவே வந்த விண்ணப்பங்களை தேர்வு செய்யும் பணி தான் நடந்து வருகிறது. நீங்கள் ஏற்கனவே இந்த வேலைக்கு விண்ணப்பித்திருந்தால் மட்டுமே உங்களுக்கு இந்த வேலை கிடைக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *