தாயை குப்பை போல வீசிச்சென்ற மகன்கள்: மனநலம் பாதித்து மண்ணை தின்ற கொடுமை

அரசு வேலையில் இருக்கும் இரண்டு மகன்கள் இரக்கமற்ற நிலையில், தாயை கைவிட்டு வீட்டுக்குள் பூட்டி வைத்து பராமரிப்பு இன்றி விட்டதால், மனநலம் பாதிக்கப்பட்டு, மண்ணை தின்ற சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர், காவிரி நகர் 5வது தெருவை சேர்ந்தவர் ஞானஜோதி, 62, இவரின் கணவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, இவரது கணவரும், மகள் ஒருவரும் இறந்து விட்டனர். தற்போது, இவரின் மூத்த மகன் சண்முகசுந்தரம் சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், இளைய மகன் வெங்கடேசன் என்பவர் துார்தர்ஷன் தொலைகாட்சியில் பணியாற்றியும் வருகின்றனர். இந்நிலையில், சொத்து பிரச்னை காரணமாக, இரண்டு மகன்களும் ஞானஜோதியை கவனிக்காமல் கைவிட்டுள்ளனர். மேலும், அவரை ஒரு வீட்டில் வைத்து பூட்டியுள்ளனர். இதனால் ஞானஜோதி மனநலம் பாதிக்கப்படவராக மாறினார்.

எப்போதாவது மகன்கள், பிஸ்கட் வாங்கி கேட் வழியாக தூக்கி வீசி விட்டு சென்று வந்துள்ளனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் கேட்டால், அவர்களிடம் இரண்டு மகன்களும் சண்டை போடுவார்கள். இதனால், அக்கம் பக்கத்தினரும் கண்டுக்கொள்ளாமல் விட்டு விட்டனர். இருப்பினும் அவ்வப்போது, அப்பகுதியினர் உணவு வழங்கி வந்துள்ளனர். இதனால் சரியான உணவு இல்லாமல் ஞானஜோதி எலும்பும் தோலுமாக மாறிபோனார். தண்ணீர், உணவு முறையாக கிடைக்காமல், வீட்டின் தரையில் கிடந்த மண்ணை தின்று இருந்து வந்துள்ளார்.

இதை வீடியோவாக எடுத்த சமூக நல ஆர்வலர் ஜெயச்சந்திரன், வாட்ஸ் அப் மூலம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு புகாராக அனுப்பினார். கலெக்டர் உத்தரவின் பேரில், சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி விமலா தலைமையிலான குழுவினர், மூதாட்டி ஞானஜோதியை போலீஸ் பாதுகாப்புடன் மீட்டு, மருத்துவ சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அத்துடன் தாயை கைவிட்ட மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளனர்.

முன்னதாக, மூதாட்டி ஞானஜோதி மீட்பதற்காக, வந்த அதிகாரிகளிடம் மூத்த மகன் சண்முகசுந்தரம், சொத்தையும், பென்சன் பணம் 30 ஆயிரத்தையும் தம்பி வெங்கடேசன் எடுத்து கொள்ளுவதாகவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டரோ தவிர தனது தாயை பற்றி அவர் கொஞ்சம் இரக்கமில்லாமல், நின்றது தான் வேதனையின் உச்சமாக அப்பகுதியினர் பார்த்து கண்ணீர் வடித்தனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *