101 வயதான ஹேசல் மெக்கல்லியன் டொராண்டோ பியர்சனில் பணிபுரியும் மூன்று வருட ஒப்பந்தம்!…. ( வீடியோ )
101 வயதான ஹேசல் மெக்கல்லியன் டொராண்டோ பியர்சனில் பணிபுரியும் மூன்று வருட ஒப்பந்த நீட்டிப்பை ஏற்றுக்கொண்டார்! கனடிய வரலாற்றில் நீண்ட காலம் பணியாற்றிய மேயர்களில் ஒருவரான ஹேசல் மெக்கல்லியன் (Hazel McCallion), கிரேட்டர் டொராண்டோ விமான நிலைய ஆணையத்தின் குழு உறுப்பினராக மூன்று வருட ஒப்பந்த நீட்டிப்பை ஏற்றுக்கொண்டார்.
மத்திய போக்குவரத்து அமைச்சர் ஒமர் அல்காப்ரா இந்த வார செய்தி வெளியீட்டில் 101 வயதான ஹேசல் மெக்கல்லியன் வாரியத்தில் இயக்குநராக மீண்டும் நியமிக்கப்பட்டார் என்ற அறிவித்தலை விடுத்தார். திருமதி மெக்கல்லியன் முதலில் 2017 இல் GTAA குழுவில் நியமிக்கப்பட்டார்.
GTAA என்பது டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தை நடத்தும் அமைப்பாகும். “கிரேட்டர் டொராண்டோ விமான நிலைய ஆணையத்தில் தொடர்ந்து சேவை செய்ய திருமதி மெக்கல்லியன் ஒப்புக்கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என அல்காப்ரா கூறினார்.
“அவர் தனது சமூகத்திற்காக 40 ஆண்டுகளுக்கும் மேலான சேவையை அர்ப்பணித்துள்ளார், மேலும் கனடாவின் மிகப்பெரிய விமானத்தை மேற்பார்வையிடுவதிலும் வழிநடத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறார்.”
ரொறொன்ரோ பியர்சன் விமான நிலையம் அமைந்துள்ள மிசிசாகாவின் மேயராக மெக்கல்லியன் 36 ஆண்டுகள் பணியாற்றினார்.
GTAA இன் வாக்குமூலத்தின் படி, குழுவில் உள்ள இயக்குநர்கள் பியர்சன் விமான நிலையத்தின் வணிக இலக்குகளை அடைவது தொடர்பில் நிர்வாகத்தை மேற்பார்வையிடுவதுடன் வழிகாட்டிகளாகவும் திகழ்கின்றனர் எனலாம் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியே. இந்த மூத்த பிரஜை தன் முதிர் வயதிலும் உற்சாகமாக பணியாற்றிக் கொண்டிருப்பது எமக்கும் ஒரு உற்சாகமளிக்கும் செய்தி அல்லவா? கனடிய தொலைக்காட்சிகளில் இன்று இவரின் அயராத உழைப்பே பேசுபொருள். தமிழாக்கம்: கிறிஸ்டி நல்லரெத்தினம்.