பொதுக்கழிப்பிடங்களும் உதயநிதி ஸ்டாலினும்!…. ஏலையா க.முருகதாசன்.
தமிழக திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினராகவிருக்கும் உதயநிதி ஸ்ராலின் பொதுக் கழிப்பிடங்களின் முக்கியத்தை மிக அக்கறையுடன் கவனித்து அதுசார்ந்த கருத்தரங்கை நடத்தத் தீர்மானித்துள்ளார்.இது பாராட்டப்பட வேண்டிய விடயமே.
தமிழகத்தில் நீண்டகாலமாக தனித்தனி குடும்பங்களுக்கான கழிப்பிட வசதியாகட்டும் பொதுக் கழிப்பிட வசதியாகட்டும் எப்பொழுதும் பாராமுகமாகவே இருந்து வருகின்றது.
கழிப்பறை என்றால் அது வேண்டத்தகாத விடயம் என்பது போலவும் அருவருப்புக்குட்பட்டது என்பது போலவும் ஒதுங்கிப் போகும் மனநிலை இருந்து கொண்டேயிருக்கின்றது.
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் முனனோடி நடவடிக்கையாக இவ்விடயத்தில் கவனம் செலுத்தியுள்ளார்.
பொதுக்கழிப்பிடங்களை பயன்படுத்துவதில் நானறிந்த வகையில் அவற்றைப் பயன்படுத்துவோருக்கான வசதிகளாக இலங்கையிலும் இந்தியாவிலும் தண்ணீர் வசதி இருத்தல் அத்தியாவசியமாகின்றது.
சிறுநீர் கழிப்பதாக இருந்தாலென்ன மலம் கழிப்பதாக இருந்தாலென்ன கழிக்கும் குழிக்குள் தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்யும் பிறஸ்ஸால் உரஞ்சி சுத்தம் செய்தல் வேண்டும்.தமது மலத்தையே அருவருப்புடன் பார்ப்போர் பொதுக்கழிப்பறைக் குழிகளை பயன்படுத்தியன் பின்பு சுத்தம் செய்வதற்கு விரும்புவது இல்லை.ஏதோ வேண்டாத இடத்திற்கு வந்தவிட்டதாக நினைத்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு வேகமாகப் போய் விடுகிறார்கள்.
அதைப் போல சிறுநீர் கழிப்போரும் தண்ணீர் ஊற்றிச் சுத்தம் செய்தல் வேண்டும்.இவையெல்லாம் தமது வாழ்வோடு சம்பந்தப்பட்டவை அல்ல என்பது போல நடந்து கொள்வோரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அருவருப்புடன் பார்க்கும் அவரவர் மலமும் சிறுநீரும் அவை உடலைவிட்டு கழித்தல் வரையும் அதே வேதியல் தன்மையுடன் அவரவர் உடம்புக்குள்ளேதான் இருக்கின்றன என்பதை உணரத் தவறுகின்றோம்.
சுத்தப்படுத்தலுக்கு தண்ணீரைப் பயன்படுத்தலால் தண்ணீர் காயாமல் இருப்பதுடன் ஒருவரால் பயன்படுத்தி சிந்தப்படும் தண்ணீர்த்துளிகளால் கழிப்பிடத்தை பயன்படுத்தும் மற்றையவர்களுக்கு சுகாதாரக் கட்டுப்பாட்டுக் குறைபாட்டால் நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
சுத்தப்படுத்தலுக்கு, சுத்தப்படுத்தலுக்கான தாள்களைப் பயன்படுத்தும் போதும் அவற்றைப் பயன்படுத்தும் முறையால் கழிப்பிட குழிகளில் அடைப்புக்கள் ஏற்படுவது மட்டுமல்ல, தண்ணீரும் தேங்கி வழிகின்ற நிலைமை உருவாகின்றது.
பொதுக் கழிப்பிடங்களில் சுத்தப்படுத்துவோரை நியமித்து சுத்தப்படுத்தலைச் செய்யும் போதும் „ கக்கூஸ் கழுவுகிறவர் கழுவட்டும் „ என்று ஏனோதானோ என்று சொல்லுகின்ற கழிப்பிடத்தை பயன்படுத்துவோர் நிறையவே இருக்கிறார்கள்.
கழிப்பிடத்தைச் சுத்தம் செய்வோரையும் அவர்கள் மனிதகுலத்துக்கு அப்பாற்பட்டவர்கள் போன்று அலட்சியமாகப் பார்க்கும் போக்குள்ளவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.
பொதுக்கழிப்பிடங்களில் வேலை செய்வோரும் தமக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையுடனும் தாங்கள் பாவிகள் என்பது போலவும் மற்றவர்கள் தம்மீது கழிவிரக்கம் கொள்ளும் வகையிலும் தம்மைத்தாமே நொந்து கொள்கிறார்கள்.
உடுக்கும் உடைகள்கூட நேர்த்தியாக சுத்தமாக இருக்கத் தேவையில்லை இந்த இடத்துக்கு அழுக்கான கசங்கிய உடைதான் பொருத்தமானது எனத் தவறான கண்ணோட்டத்துடன் அவ்வெண்ணத்துக்குள் தம்மைத் திணித்துக் கொள்கிறார்கள்.
பொதுக்கழிப்பிடங்களை பயன்படுத்தலுக்கான கருத்தரங்கு தமிழகத்தில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் இப்பொழுது யாழ் பேருந்து நிலையம் இருக்கும் இடத்தில் யாழ் மாநகர ஆட்சியினால் பராமரிக்கப்பட்ட ஒரு பொதுக்கழிப்பிடம் இருந்தது.அங்கே நான் சிறுநீர் கழிப்பதற்காகப் போயிருந்த போது, கழிப்பிட உள்பகுதியில் எட்டிஎட்டிக் கால் வைத்தே போனேன்.ஆங்காங்கே………….