ரஷ்யாவிலிருந்து எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடை

ரஷ்யாவிலிருந்து எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பையொட்டி உலக நாடுகள் விதிக்கும் தடைகளில் அதுவும் ஒன்று.

ரஷ்யாவின் பொருளியலுக்கும் அதன் படையெடுப்புக்கும் எண்ணெய் ஏற்றுமதிகள் முக்கிய பங்களிப்பதாகக் கருதப்படுகிறது.

இவ்வாண்டு இறுதிக்குள் ரஷ்ய எண்ணெய், முற்றிலும் பயன்பாட்டிலிருந்து நீக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

உக்ரேன், ரஷ்யாவுக்குக் கிடைத்த ‘வெற்றியாக’ எப்போதும்
திகழமாட்டாது என்று அவர் சொன்னார்.

ரஷ்யா மீதான தடை,தோழமை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பிறகு முடிவெடுக்கப்பட்டதாகத் திரு. பைடன் கூறினார்.

அமெரிக்காவின் எண்ணெய் இறக்குமதிகளில் 10 விழுக்காடு மட்டுமே ரஷ்யாவிலிருந்து வருகிறது.

ஐரோப்பாவும் அதன் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தவுள்ளது.

எண்ணெய் இறக்குமதிகளில் மூன்றில் இரண்டு பங்கைக் குறைக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் சொன்னது.

அதன் எண்ணெய்த் தேவைகளில் 40 விழுக்காடு ரஷ்யாவைச் சார்ந்திருக்கிறது.

பிரிட்டன், அதன் எண்ணெய் இறக்குமதிகளை முற்றிலும் நிறுத்தவுள்ளதாகக் கூறியுள்ளது.

இந்நிலையில், எரிசக்தித் தடைகளைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *