சிறப்பு செய்திகள்

வடமேற்கு மியன்மாரின் இரு கிராமங்களுக்குத் தீ வைக்கப்பட்டது

மியன்மாரில் ஆட்சிக்கவிழ்ப்பு நடந்த ஓராண்டைக் குறிக்கும் நோக்கில் அங்கு தொடர்ந்து வன்செயல்கள் இடம்பெறுகின்றன.

வடமேற்கு மியன்மாரில் இரு கிராமங்களுக்குத் தீ வைக்கப்பட்டது.

நூற்றுக்கணக்கான வீடுகள் எரிந்து சாம்பலாயின.

ராணுவ ஆட்சி எதிர்ப்பாளர்களைத் தேடுவதற்கு மியன்மார் ராணுவம் பயன்படுத்தும் உத்தியில் இதுவும் ஒன்று எனக் கிராம மக்கள் குறைகூறினர்.

மியன்மார் ராணுவத்திற்கு நெருக்குதல் அளிக்க அனைத்துலகச் சமூகத்திற்குக் கோரிக்கை விடுத்த ஐக்கிய நாட்டு நிறுவன மனித உரிமைகள் குழுவை மியன்மார் குறைகூறியது.

அந்நாட்டின் உள்விவகாரங்களில் அது தலையிட்டதாக மியன்மார் தெரிவித்தது.

இதற்கிடையே, பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi)மீது மியன்மார் ராணுவ அரசாங்கம் கையூட்டுக் குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *