இலக்கியச்சோலை

தென்னாப்ரிக்க எழுத்தாளரின் நாவலுக்கு புக்கர் பரிசு

இலக்கியத் துறைக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதுகளில், புக்கர் பரிசுக்கு முக்கிய இடம் உண்டு. சிறந்த ஆங்கில படைப்புகளுக்கு, புக்கர் பரிசாக, ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தப் பரிசு, 1969ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

புக்கர் பரிசு 2021க்கு, 158க்கும் அதிகமான எழுத்தாளர்கள், தங்கள் படைப்புகளை அனுப்பியிருந்தனர். இறுதிச் சுற்றுக்கு, தென்னாப்ரிக்காவை சேர்ந்த டாமன் கல்கட்டின், ‘தி பிராமிஸ்’ மற்றும் இலங்கையின் அனுக் அருட்பிரகாசம் எழுதிய ‘எ பாசேஜ் நார்த்’ உட்பட ஆறு நாவல்கள் தேர்வாயின.

இந்நிலையில், தி பிராமிஸ் நாவல், புக்கர் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டுகளில், டாமன் கல்கட்டின் இரண்டு நாவல்கள், இறுதி சுற்று வரை முன்னேறியிருந்தன. மூன்றாவது முறையாக இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்ட அவரது நாவல், 2021ம் ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்றுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *