மெல்பன் கேசி தமிழ் மன்றத்தின் தலைமுறை இணைவு மெய்நிகர் அரங்கு!…. மதுரா இராஜலிங்கம்.

![]()
![]()
![]()
புகலிட நாடுகளில் தலைமுறை இடைவெளி – தலைமுறை இணைவு என்பன பிரதான பேசுபொருளாக விளங்குகிறது.
மூத்த தலைமுறையினருக்கும் இளம் தலைமுறையினருக்கும் மத்தியில் ருசி பேதம், கருத்து பேதம், பார்வையில் பேதம் என்பன இருக்கின்றன.
எனினும், அவர்கள் ஒரு புள்ளியில் இணைந்து உரையாற்றவும் இயங்கவும் முடியும். அதன் மூலம் பரஸ்பரம் ஒருவரிடமிருந்து மற்றவர் கற்கவும் பெற்றுக்கொள்ளவும் முடியும்.
அத்துடன் இளம் தலைமுறையினரின் உள்ளார்ந்த ஆற்றல்களை இனம்கண்டு வெளிக்கொணரவும், அவர்களின் சுயவிருத்தியை ( Self Development ) மேம்படுத்தவும் இயலும்.
மூத்தவர்களும், இளம்தலைமுறையினரிடமிருந்து நவீன தொழில் நுட்பங்களை கற்றுத் தேறவும் முடியும். இவ்வாறு இரண்டு தரப்பினரும் இணையும் போது புரிந்துணர்வும், நேசமும் அதிகரிக்கும்.
அந்த அடிப்படையில் கடந்த 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எமது கேசி தமிழ்மன்றம் நடத்திய தலைமுறை இணைவு மெய்நிகர் நிகழ்ச்சி பற்றிய எமது பார்வையை இங்கு பதிவுசெய்கின்றோம்.
Get Online week என்பது Good Things Foundation ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு Digital inclusive campaign பிரசாரமாகும். 2007 இல் இங்கிலாந்தில் தொடங்கிய இந்த இயக்கம் 2018 இல் அவுஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது,
ஒவ்வொரு வருடமும் ஒரு வாரம் நடக்கும் நிகழ்வாகும். இந்த ஆண்டுக்கான Get online week campaign இம்மாதம் ( அக்டோபர் ) 18 முதல் 24 வரை நடைபெற்றது.
இந்த இயக்கத்தின் நோக்கம் Digital திறன்களை மேம்படுத்தவும் Digital இடைவெளியை நிரப்பவும் உதவுகிறது.![]()
இத்தகைய நவீன தொழில் நுட்பத்தில் அவுஸ்திரேலியாவில் நான்கில் ஒரு வீதமான
அவுஸ்திரேலியர்கள் இந்த Digital உலகில் சேர்ந்து பயணிக்க முடியாமல் இருக்கிறார்கள்.
40% இற்கும் குறைவான அவுஸ்திரேலியர்கள்தான் தொழில்நுட்ப மாற்றங்களின் வேகத்தை தங்களால் தக்கவைக்க முடியும் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர்.
அதிலும் வயதானவர்கள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தினர் மற்றும் மூத்த பிரஜைகள் Digital world இலிருந்து விலகியிருப்பதையும் அத்தகையவர்களுக்கு
இது எவ்வளவு பெரிய பின்னடைவு என்பதையும் கடந்த இரண்டு வருட காலப்பகுதி சமகால கொரோனோ பெருந்தொற்று நமக்கு கற்றுத் தந்திருக்கிறது.
அதனால், நமது நல்வாழ்வுக்கும் பாதுகாப்பிற்கும் டிஜிட்டல் திறன்கள் எவ்வளவு முக்கியம் என்பதையும் எம்மவர்களுக்கு தெளிவுபடுத்தவேண்டியிருந்தது. குறிப்பாக zoom , QR Code , COVID certification முதலான விடயங்களில் .
அதை முன்னிட்டு இவ்வருடம் தலைமுறைகளின் இடைவெளி எனும் நிகழ்வு மெல்பன் கேசி தமிழ் மன்றத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
தமிழர் புலம்பெர்ந்த நாட்டில் மூத்த பிரஜைகளின் நலன் பேணலும் அவர்களை மேம்படுத்துதலும் இம்மன்றத்தின் நோக்கங்களில் ஒன்றாகும்.
எனவே இந்த டிஜிட்டல் பயணத்தில் எங்களுடன் உங்களையும் அழைத்துச் செல்ல இணைந்து பணியாற்றுகிறோம்.
கடந்த 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடந்த தலைமுறை இணைவு நிகழ்வு மெய்நிகர் அரங்கின் படங்களை இந்தப்பதிவில் காணலாம்.
—0—
![]()