இலக்கியச்சோலை

உலகமே எதிர்பார்த்த அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு!

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸா, ரஷிய பத்திரிகையாளர் டிமிட்ரி முராடோவுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்பு கடந்த திங்கட்கிழமையில் இருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியல் துறைக்கான  நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து அறிவிக்கப்பட்டது.  நேற்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு  அறிவிக்கப்பட்டது.

பத்திரிகையாளர்களான  மரியா ரெசா (பிலிப்பைன்ஸ்), டிமிட்ரி முராட்டா (ரஷ்யா) ஆகிய இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.  அமைதி, ஜனநாயகத்துக்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம் இருப்பதை வலியுறுத்தியதாக  இருவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *