இலக்கியச்சோலை

கருணாநிதி வழங்கிய நிதியில் இருந்து சிறந்த எழுத்தாளர்கள் 6 பேருக்கு விருது …. புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கம்!

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கடந்த 2007-ம் ஆண்டு தனது சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயை பபாசியிடம் வழங்கி, ஆண்டுதோறும் பல்வேறு துறைகளை சேர்ந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும் ஒரு பிறமொழி எழுத்தாளருக்கும், ஒரு ஆங்கில மொழி எழுத்தாளருக்கும் தலா ரூ.1 லட்சம் வீதம் பொற்கிழியும், விருதும் வழங்கக் கூறினார்.
அதற்காக பபாசியால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையில் இருந்து, கவிதை, புனைவிலக்கியம், உரைநடை, நாடகம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் சிறந்து விளங்கும் 2 எழுத்தாளர்களுக்கும் ஆண்டுதோறும் விருது மற்றும் ரூ.1 லட்சம் வழங்கி கவுரவித்து வருகிறது.
2007-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 84 எழுத்தாளர்களுக்கு ரூ.84 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
2021-ம் ஆண்டுக்கான விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு, அபி (கவிதை), ராஜேந்திர சோழன் (புனைவிலக்கியம்), எஸ்.ராமகிருஷ்ணன் (உரைநடை), வெளி ரங்கராஜன் (நாடகம்), மருதநாயகம் (ஆங்கிலம்), நதித் சாகியா (பிற இந்திய மொழி காஷ்மீரி) ஆகிய 6 பேரை விருதுக்கு தேர்வு செய்துள்ளது.
கொரோனா காரணமாக நடைபெறாமல் நின்றுபோன 2020-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, 2021-ம் ஆண்டுக்கான விழாவுடன் சேர்த்து நடைபெறும்.
விழா நடைபெறும் தேதி மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *