இன்று நிகர் சமூக கலை இலக்கிய அரங்கத்தின் பாரதி நூற்றாண்டு நிகழ்ச்சி மெய்நிகரில்!

இலங்கை நிகர் சமூக கலை இலக்கிய அரங்கத்தின் ஏற்பாட்டில், மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டை முன்னிட்டு, 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6-00 மணிக்கு நிகழ்ச்சி ஒன்று மெய்நிகர் முறையில் நடைபெறவுள்ளது.![]()
அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் திரு. லெ. முருகபூபதி இந்நிகழ்வில் தலைமையுரை நிகழ்த்துவார். தமிழ் வாழ்த்துடன் தொடங்கும் இந்நிகழ்வு, திரு. வீ.எம். ரமேஷின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும். செல்விகள் ம. சதுர்சிக்கா, ச. அக்சயா, கவிதைகள் சமர்ப்பிப்பர். பாரதியின் கண்ணன் பாடல் − ஒரு மீள்பார்வை என்ற தலைப்பில் திரு.வ.செல்வராஜ் சிறப்புரையாற்றுவார். திருவாளர்கள் உச்சிமலை உதயா, த. மகேந்திரன் ஆகியோரின் கவிதைகளைத் தொடர்ந்து, கருத்துரைகளும் திரு.வே.இராமரின் நிறைவுரையும் நிகழும்.
நிகழ்ச்சித்தொகுப்பு : திரு. அ. வைத்திலிங்கம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : நிகர் சமூக கலை இலக்கிய அரங்கத்தின் சார்பில் அ. லெட்சுமணன்,
Join Zoom Meeting https://chords-org-lk.zoom.us/j/5450681728?pwd=OGtZUmFNNlY5Wm9FUGZlYUxBWFh6Zz09 Meeting ID: 545 068 1728 Passcode: aruna
![]()