உலக சாதனைப் பதிவின் ஒரு ஓரத்தில் நானும் தெரிகிறேன்!…. சங்கர சுப்பிரமணியன்.

![]()
![]()
ஆரஞ்சு உலக சாதனகள்(Orange World Records) என்ற அமைப்பு மலேசியாவில் இருந்து இயங்கி வருகிறது. இவ்வமைப்பு ஆண்டுதோறும் மனித சாதனைகளையும் இயற்கையில் அரிதாக நடப்பவைகளையும் பதிவேட்டில் வெளியிட்டு வருகிறார்கள். இதில் பங்கேற்று கொரோனா தொற்றில் முடங்கிய நாட்களில் இடைவிடா முத்தமிழ் கலைவிழா என்ற நிகழ்ச்சியை தேனமுத தமிழ் மக்கள் நல அறக்கட்டளை என்ற அமைப்பு நடத்தியது.
இந்த அமைப்புடன் தில்லி கலை இலக்கிய பேரவை, தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி மற்றும் ஆரஞ்ச் வேல்ட்
ரெகார்ட் என்று அமைப்புக்களும் இணைந்து இவ்விழாவை
எழுநூற்று இருபதுமணி நேர உலக சாதனை முயற்சியாக நடத்த முடிவுசெய்தது. இந்நிகழ்ச்சியில் பன்னாட்டு கவியரங்கம், பன்னாட்டு பட்டிமன்றம், பன்னாட்டு ஆன்மீக கருத்தரங்கம், சிறுவர் அரங்கம்
மற்றும் பேச்சரங்கம் போன்ற பற்பல நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக தொடரந்து அரங்கேறிய வண்ணம் இருந்தது.
![]()
![]()
இந்நிகழ்ச்சி இவ்வாண்டு மே மாதம் இருபத்தியாறாம் நாள் காலை ஒன்பது மணிக்கு தொடங்கி ஜூலை மாதம் பன்னிரெண்டாம் நாள் காலை இரண்டுமணி பத்து நிமிடம் வரை இடைவிடாது தொடர்ந்து மொத்தமாக ஆயிரத்து நூற்று நாற்பத்திநான்கு மணி நேரம் பத்து நிமிடங்கள் வரை நடைபெற்றது.
இந்த முத்தமிழ் கலைவிழாவில் என்னை இணைத்தவர் திரு. ஜெயராம சர்மா அவர்கள். தில்லி கலை இலக்கிய பேரவையின் செயலாளர் திரு. பா. குமார் என்னைப் பற்றி கவிதை எழுதுவாரா என்று கேட்டதற்கு அவர் தமிழில் அல்ல ஆங்கிலத்திலும் கவிதை எழுதுவார் என்று என்னைப் பற்றி கூறியிருக்கிறார். கடந்துவந்த பாதையை திரும்பிப் பார்க்காதவன் செல்லவேண்டிய பாதை இருண்டுவிடும் என்ற திரு. முருகபூபதியின் அற்புதமான கருத்தை ஏற்கும் நான்
இங்கு திரு. ஜெயராமசர்மா அவர்களைப்பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. சித்தாந்தத்தில் வேறுபட்டிருப்பினும் எங்களுக்குள் நட்பில் வேற்றுமையில்லை.![]()
அதன்பின் கவியருவி. அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற பன்னாட்டு கவியரங்கத்தில் நான் கலந்து கொண்டு “ஆதவன்” என்ற தலைப்பில் கவிதை வழங்கினேன். அதனைத் தொடர்ந்து பல அறிஞர்கள் கலந்துகொண்டு உரையாற்றிய உரையாடலில் “கவிதையும் தாக்கமும்” என்ற தலைப்பில் நாற்பது நிமிடங்கள் எனது பங்களிப்பை வழங்கினேன். அதனையொட்டி ஐந்து நிமிடங்கள் எனது பங்களிப்பை பாரட்டி அது ஏற்படுத்திய தாக்கங்களைப் பற்றி கலந்தாலோசிக்கப் பட்டது.
தற்போது உலக சாதனையை முறியடித்து புதிதாக சாதனை படைத்திருப்பதால் ஆரஞ்ச் வேல்ட் ரெக்காட் அமைப்பு எனக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்திருப்பதை
அக்கினிக்குஞ்சு வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()