இலக்கியச்சோலை
பெட்டைக் காகங்களிடும் குயில் குஞ்சுகள்!… கவிதைத் தொகுப்பு…. பூர்ணிமா கருணாகரன்.

பெண்மையைப் புரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு பூர்ணிமா கருணாகரனின் “பெட்டைக் காகங்களிடும் குயில் குஞ்சுகள்” கவிதைத் தொகுப்பு உதவக்கூடியதாக இருக்கும்.
பெண்கள் மீதான உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு ஓர் தனிநபர் தொடக்கம் இச் சமூகம் வரை என்னவெல்லாம் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது என்பதை பூர்ணிமா கருணாகரனின் இந்தப் படைப்பு சுட்டிக்காட்டிக்கொண்டிருக்கிறது.
பூர்ணிமா அவர்களது கவிதைகள் கண்ணீரின் வார்ப்புகளாக வலிகளின் கோர்ப்புகளாக மாத்திரமல்லாது ஒரு பெண்ணால் அனைத்துப் பிடிகளிலிருந்தும் திமிறியெழ முடியும்; தனக்குத் தேவையானவைகளைத் தன்னால் பெற முடியும் என்ற அவரது நிமிர்வு புரட்சிகரமானது.
தந்தையின் இறப்பு எழுத்தாளர் மீது ஏற்படுத்திய காயங்களை இன்னும் ஆற்றிக்கொள்ளவில்லை என்பதை இவரது கவிதைகள் மூலம் அறியமுடிகிறது.
பெண்ணியம் சார்பாக விரல் நீட்டியிருக்கும் நூலாசிரியரின் கவிதைகள் பெண்கள் மீதான தவறுகளை எதிர்த்திருப்பதும் சிறப்பு.
புத்தகத்தின் தலைப்பிற்கான கவிதை பின் அட்டையில் வந்திருப்பது அழகான சிந்தனை இவரது அடுத்த படைப்புகள் இன்னும் இன்னும் தரமான படைப்பாக வெளிவர பண்டாரவன்னியன் புத்தகசாலையின்
வாழ்த்துகள்
.
இவண் – பண்டாரவன்னியன் புத்தகசாலை
![]()