கட்டுரைகள்
நீங்கா நினைவுகள்!… தொடர் 1… இளம்பிறை. எம்.ஏ.ரகுமான்.


முதன் முதலில் சந்தித்த எழுத்தாளர்.
இளமைப் பருவத்திலேயே இலக்கிய ஆர்வம் இயல்பாகவே என்னுள் துளிர்த்தது.
கல்லூரியில் பயிலும்போதே கதை கட்டுரைகள் எழுதி வளர்ந்தேன், கொழும்பில் நடைபெற்ற விழாவில் இந்தியாவிலிருந்து இரு அறிஞர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களில் ஒருவர் தருமபுர ஆதீனத்தைச் சேர்ந்த சிவபாத சுந்தரம் மற்றவர் நா பார்த்தசாரதி. இந்த நிகழ்ச்சி பற்றி தினகரனில் நான் ஒரு ஆசிரியர் கடிதம் எழுதினேன். இதை பார்த்த அன்பர் ஸ்ரீகாந்தா என்பவர் எனக்கு ஒரு இலக்கிய கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். அந்தக் கூட்டம் வெள்ளவத்தையில் நடந்ததாக நினைவு. அதிலேதான் முதன்முதலாக கே எஸ் சிவகுமாரன் அவர்கள் எனக்கு அறிமுகமானார்.
ஆண்டு சரியாக நினைவிலில்லை 56 அல்லது 57 ஆக இருக்கலாம். அதை தொடர்ந்து எங்கள் இலக்கிய நட்பு வளர்ந்தது அறுபதுகளில். என்னுடன் இணைந்து ஏ ஆர் அச்சகத்தில் பணியாற்றிய என் சகா ஆர் கனகரத்தினம் ஐ சி ஐ கம்பெனியில் பணியாற்றினார். அவரது அலுவலகம் கோட்டை கபூர் பில்டிங்கில் இயங்கியது. அவரை பார்க்க செல்லும்போதெல்லாம் அதே பில்டிங்கில் லோக்கல் கவர்மெண்ட் அலுவலகத்தில் பணியாற்றிய சிவகுமாரன் அவர்களையும் அடிக்கடி சந்திக்கவும் வாய்ப்பு கிட்டியது. எமது நீண்ட நெடிய பயணத்தில் நீங்கா நினைவுகள் உள. அதில் முதல் நினைவை சிவா உங்களுடன் பகிரவே இங்கு எழுதினேன்….
ஆண்டு சரியாக நினைவிலில்லை 56 அல்லது 57 ஆக இருக்கலாம். அதை தொடர்ந்து எங்கள் இலக்கிய நட்பு வளர்ந்தது அறுபதுகளில். என்னுடன் இணைந்து ஏ ஆர் அச்சகத்தில் பணியாற்றிய என் சகா ஆர் கனகரத்தினம் ஐ சி ஐ கம்பெனியில் பணியாற்றினார். அவரது அலுவலகம் கோட்டை கபூர் பில்டிங்கில் இயங்கியது. அவரை பார்க்க செல்லும்போதெல்லாம் அதே பில்டிங்கில் லோக்கல் கவர்மெண்ட் அலுவலகத்தில் பணியாற்றிய சிவகுமாரன் அவர்களையும் அடிக்கடி சந்திக்கவும் வாய்ப்பு கிட்டியது. எமது நீண்ட நெடிய பயணத்தில் நீங்கா நினைவுகள் உள. அதில் முதல் நினைவை சிவா உங்களுடன் பகிரவே இங்கு எழுதினேன்….தொடரும்.
![]()