இலக்கியச்சோலை

கி.ரா. நினைவுகள்!…. கருப்பையா ராஜா – மெல்பன்.

( மெல்பன் கே.சி. தமிழ்மன்றத்தின் மூத்த பிரஜைகளின் வாராந்த நிகழ்வில் நிகழ்த்திய உரை )

மூத்த எழுத்தாளர், கரிசல் இலக்கிய வேந்தர் கி. ரா. அவர்கள் ஒரு 16 ஆம் தேதி பிறந்தார் ஒரு 17ஆம் தேதி மறைந்தார். இடையே அவர் கடந்த வாழ்க்கை ஓர் நூற்றாண்டு . 99 வயது எனச் சொன்னாலும், அது ஓர் நூற்றாண்டே !

கி.ரா என அன்போடு அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் .

மழைக்காக பள்ளியில் ஒதுங்கினேன், ஆனால், மழையை பார்த்துக்கொண்டே இருந்து விட்டேன் என வேடிக்கையாக சொன்னாலும், பிற்காலத்தில்

பல்கலைக்கழகத்தில் வகுப்பெடுக்கும் பேராசிரியரானார்.

அவர் படித்தது மக்களிடமிருந்துதான். ஓர் நூற்றாண்டின் காலக் கண்ணாடி அவரின் படைப்புகள்.

கோவில்பட்டிக்கு அருகில் இடைசெவல் கிராமத்தை சேர்ந்தவர்.

சாதி,மதம் என்ற வேறுபாடுகளை விட்டு விட்டு

கவனித்து பார்த்தால் நில ஆக்கிரமிப்பை புரிந்து கொள்ள முடியும். நிலங்கள் பிடுங்கப்பட்டுக்கொண்டிருக்கும் இக்கால நிலையில் கரிசல் நிலம் குறித்தும், அம் மக்களின் வாழ்வையும் எழுத்தில் வடித்தவர் கி.ரா

கரிசல் இலக்கியம் எனச் சொன்னாலே கி.ரா

அனைவருக்குமான முன்னெத்தி ஏர்.

ஐவகை நிலங்களாக பிரித்து வாழ்ந்த தமிழ் மொழி, நிலங்களை மன உணர்வுகளோடு ஒப்பிட்டு பார்த்த தமிழ் அவருடையது.

தமிழகத்தின் தென் பகுதி வானம் பார்த்த பூமி

வாழ்வும் அப்படித்தான், விவசாய வாழ்வும், வரட்சி நிலமும் இருப்பதால் மக்களின் வாழ்வாதார சிக்கல்கள், அவர்தம் இன்ப துன்பங்கள், என அவரின் படைப்புகளே கரிசல் இலக்கியங்களாயின.

அவரின் எழுத்துக்களை பின் பற்றி ஏராளமான மண் சார்ந்த எழுத்துக்கள் வெளிவந்தன. நவீன இலக்கியத்தில் வட்டார எழுத்துக்களின் பிதா மகன் கி.ரா.

வட்டார வழக்குச் சொல் அகராதியையும் தொகுத்தவர்.

இப்படி கி.ராவின் வாழ்வை படைப்புகளை

இந்த ஆண்டு முழுவதும் பேசிக்கொண்டே இருப்பதும், அவரின் படைப்புகளை பரவலாக்குவதும், அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதும் அனைத்து இலக்கிய ஆர்வலர்களின் பணியாகும்.

மெல்பேர்ன் வாசகர் வட்டத்தில் கி.ரா வின் “கதவு” சி றுகதை தொகுதி வாசிப்பு அனுபவ பகிர்வாக பேசிய நினைவலைகள் நெஞ்சிலிருந்து நீங்காதவை. எழுத்தாளர் முத்து கிருஷ்ணன் அவர்களுக்கும், வாசகர் வட்ட ஒருங்கினைப்பாளர் சாந்தி சிவா அவர்களுக்கும் நன்றி.

ஆஸ்ரேலிய மண்ணில் கி.ரா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முதல் அமைப்பு மெல்பேர்னைச் சேர்ந்த கே.சி தமிழ் மன்றமாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்

தமிழ் மூத்த பிரஜைகளின் வாராந்திர இணையவழி சந்திப்பு அரங்கில்

கி.ரா அவர்களின் நினைவுகளை பேச எனக்கு வாய்ப்பு அளித்த பேரன்புமிக்க ஐயா முருகபூபதி அவர்களுக்கும், நிகழ்வை ஒழுங்கு செய்த மதிப்பிற்குரிய ஐயா நவரத்தினம் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

 

—0—

Loading

One Comment

  1. நீர் பல நூல்களை நுகர்ந்து இருந்தாலும்..
    உமக்கு நார்பழ நறுமணமும்,சுவையும் கிரா அவர்கள்தான் என்பதை நான் அறிவேன் கா.ரா அவர்களே…

    உம்மைபோன்று கடலோடி..
    கால்வயிரு நிரப்ப காலமுண்டோ இல்லையோ, மனம் மிகை நிரப்ப கிரா அவர்களே போதும்!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *