சுவாசம் காக்கும் இளைஞர்களிடம் இருந்து தாய் நாடான இலங்கைக்கு ஒரு செடியினை நாட்டுவோம்!
பாதிக்கப்பட்டு சுவாசத்திற்கு ஏங்கி தமது உயிர்களை இழக்கும் கொறோனா நோயிலிருந்து அனைவரும் பாதுகாப்பு பெற வேண்டும். எனும் நோக்கில் சுவாசம் காக்கும் இளைஞர்களிடம் இருந்து தாய் நாடான இலங்கைக்கு ஒரு செடியினை நாட்டுவோம் எனும் தொனிப்பொருளில் தெற்காசியாவின் பெரிய சுயாதீன அமைப்பான இலங்கை இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் 38 வது நிறைவு தினமான இன்று தேசிய இளைஞர் தினத்தை சிறப்பிக்கும் முகமாக ஐக்கிய சமூக முன்னணியின் ஏற்பாட்டில் சாய்ந்தமருதில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இந்நிகழ்வில் ஐக்கிய சமூக முன்னணியின் தலைவரும் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான கபூர் அன்வர் மற்றும் பொதுச் செயலாளர் இந்தியாஸ் மதனி, ஐக்கிய சமூக முன்னணியின் தேசிய அமைப்பாளரும் தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தின் பிரதிநிதியான சிப்னாஸ் அஸீஸ் மற்றும் பொருளாளரும் ஆசிரியருமான அ.க.அஸ்ஹர் ஆகியோர் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நாட்டி தற்பொழுது நாட்டில் கொறோனா நோயினால் மரணித்தவர்களுக்காகவும் ஒரு நிமிட மௌன அஞ்சலியும் நிகழ்த்தினர்.