முகிழ்த்தது முத்து

ஓரை… ( சிறுகதை ) … சந்திரிகா ரஞ்சன்.

1974-ம்‌ ஆண்டு போத்துக்‌கல்‌ தேசத்தில்‌ இராணுவம்‌ தாங்கிய புரட்சி பாசிச ஆட்‌சியை அறுத்தது. டி. மில்கெய்ரா. குடும்பத்தின்‌ வசந்த காலத்தையும்‌ முடித்தது. லிஸ்பனிலிருந்து 500 கி.மீ தூரத்திலுள்ள “ஆத்தலயா” என்ற கிராமத்திற்கு வருகை தருகின்ற நூற்றுக்கும்‌ மேற்பட்ட அரச விருந்தினர்‌ களை ஓரே நேரத்தில்‌ தங்க வைத்து பெருமை கொண்ட அவரது வீடு அவர்‌ கண்‌ முன்னாலேயே எரிக்கப்‌பட்டது.
அங்கிருந்த யன்னல்களின்‌ எண்‌ணிக்கை முன்னூற்று நாற்பது என்று இன்றும்‌ அயலவர்கள்‌ கணக்கு சொல்லுவார்கள்‌. நானூறு வருட பழைமை பேசும்‌ மாளிகையின்‌ Ruins அவர்‌ இதயத்தை கிளறும்‌ நினைவுச்‌சின்னமாக இன்று பேணப்படுகின்றது. ஆனால்‌, நோய்வாய்ப்‌பட்ட மில்கெய்ரா மட்டும்‌ எழும்ப முடியாமல்‌ படுத்த படுக்கையாகிவிட்டார். வைத்தியர்களின்‌ இறுதிக்‌ கண்டுபிடிப்பு நுரையீரலில்‌ கான்சர்‌ என்பது! போத்துக்களில்‌ இனி இழப்பதற்கு வக்கிரமான உறவினர்‌களின்‌ இதயங்கள்‌ மட்டும்தான்‌ இருக்கின்ற நிலையில்‌ அவரது ஒரே மகன்‌ ரொனி அவுஸ்ரேலியாவில்‌ குடியேறிவிட்டான்‌.
இஃது அவனுடைய அறிமுகத்‌திற்கு ஒரு முன்னீடு.
—————-
பதினைந்து வருடங்களுக்கு முன்னர்‌ சிட்னிவாசியாகிவிட்ட ரொனிக்கும்‌, அண்மையில்‌ இங்கு குடிபெயர்ந்த எனக்கும்‌ இடையிலான சில அனுபவங்களே இனி.
அந்த அலுவலகத்தில்‌ நான்‌ ஒருவனே வெள்ளையன்‌ அல்லாதவன்‌. இதில்‌ , ஒர்‌ அனுகூலம்‌ உண்டு. கண்ணுக்கு தெரிபவர்‌ கள்‌ எல்லாம்‌ வெள்ளைத்தோலினராதலால்‌ நான்‌ மாற்றினத்தவன்‌ என்பது மறந்து போய்விடுகிறது. இந்த நினைப்பு தோன்‌றும்‌ படியாக ஏந்த ஒரு சந்தர்ப்‌பத்தையும்‌ அவர்கள்‌ ஏற்படுத்தவில்லை.
சொந்த நாட்டு பிரச்சனைகளை அந்நியனுக்குச்‌ சொல்லிஆறும்‌ ஏக்கம்‌ எனக்கும்‌ ஆரம்‌ப நாள்களில்‌ நிரம்ப இருந்தது,என்னை அறிவதில்‌ எந்த ஆர்வமும்‌ இல்லாமல்‌ இருக்கின்றார்‌களே என்ற ஆதங்கமே எஞ்சியது. அருகில்‌ உள்ளவர்களின்‌. அந்தரங்கங்களை  அறிவதில்‌ ஒருவருக்கும்‌ அக்கறையில்லை.
பல  நிறங்களைப்‌ பார்த்து அலுத்து விறைத்த கட்டைகள்‌. திங்கள்‌ காலையில்‌ வேலை. தொடங்கும்போதே வெள்ளி மாலையை நினைத்து, அந்த நினைவில்‌ நுகும்பும்‌ உற்சாகத்தில்‌ வேலை செய்பவர்கள்‌. வேலை எது, இவர்கள்‌ எது என்று பிரித்துப்‌ பார்க்க முடியாத அத்வைதிகள்‌.
இசைவாக்கம்‌ பலித்தது. இவர்களைப்‌ போல நானும்‌ வேலையாக மாறிக்‌ கொண்டு இருந்த காலத்திலேதான்‌ ரொனி இந்தக்‌ கந்தோரில்‌ வேலைக்குச்‌ சேர்ந்தான்‌. என்னிலும்‌ இளையவன்‌. உருவத்திலும்‌ சின்னவன்‌. வெள்ளையர்களுக்குரிய சராசரி தோற்றம்‌ கூட இல்லை. நேர்த்தியாகவும்‌, ஆடம்பரமாகவும்‌ உடுத்திக்‌ கொள்வதால்‌ அதைச்‌ சரிக்கட்டிக்‌ கொள்ளலாம்‌ என்று நினைப்பவன்‌.
அவன்‌ வந்த பிறகுதான்‌ கொம்பியூட்டரிலும்‌ கொஞ்சம்‌ மனிதவாடை வீசத்‌ தொடங்கியது. அவனுடைய அடி நாபியிலிருந்து வரும்‌ ஆங்கில உச்சரிப்பு விளங்‌காது, ஆனால்‌ ரசிக்கக்கூடியதாக இருக்கும்‌. ‌
காலையில்‌ வரும்போதே, ஏதாவதொன்றைப்‌ பற்றி குறைகூறி அலுத்துக்‌ கொள்ளாவிட்‌டால்‌ ரொனியால்‌ திருப்தியாக வேலையைத்‌ துவங்க ஏலாது. அப்படி ஒரு வாடிக்கை. கீழ் unit இல்‌ வசிக்கும்‌ கிழவி, அவுஸ்ரேலியாவின்‌ நிதியமைச்சர்‌ போல்‌ கீற்றிங்‌, பின்னால்‌ வந்த காரின்‌ சொந்தக்காரர்‌, இப்படி பலர்‌ அவனிடம்‌ absentee ஆக திட்டு வாங்குவதுண்டு.. வளைகுடா யுத்த சமயத்தில்‌ “Goodmorning” பெரும்பாலும்‌ இப்படித்தான்‌ இருக்கும்‌, “சதாம்‌ ஒரு முட்‌டாள்‌. இன்னொரு ஹிட்லர்‌.
அவன்‌ கொல்லப்பட வேண்டும்‌. நீ என்ன நினைக்கறாய்‌?”
தர்ம சங்கடமான கேள்விகள்‌ என்னை நோக்கிப்‌ பாயும்‌போது, றேச்சல்‌தான்‌ தடுத்தாட்‌கொள்வாள்‌. றேச்சல்‌ இளம்‌ பெண்‌. மூன்றாம்‌ தலைமூறை அவுஸ்ரேலியப்‌ பெற்றோருக்குப்‌ பிறந்தவள்‌. இருபத்திரண்டு வயது சிறுமி போலவும்‌ தோன்‌றுவாள்‌. அப்படித்தான் சில வேலைகளில்‌ நடந்தும்‌ கொள்‌வாள்‌. ரோனியை எதிர்த்து, விட்டுக்‌ கொடுக்காமல்‌. வாதாடுவது அவள்‌ மட்டுமே! வளைகுடா யுத்தத்தில்‌ அவுஸ்ரேலியாவின்‌ ஈடுபாட்டை கண்டித்து சிட்னியில்‌ நடந்த சமாதான ஊர்வலங்களில்‌ முன்னணியில்‌பங்கு பற்றியிருக்கிறாள்‌. இவர்‌களுடைய விவாதங்களில்‌ தனது பக்கவாத்தியமாக என்னைத்‌தான்‌ ரோனி அழைத்துக்கொள்‌வான்‌. ஒதுக்கப்பட்ட கருத்துக்களை சொல்வதன்‌ மூலம்‌ ஒதுக்கப்‌பட்டு விடுவேனோ என்ற பயத்‌தினால்‌, மனட்சாட்சியை மறந்து ரோனிக்கு ஆமாம்‌ சாமியாக
இருப்பது எனது சாமர்த்தியம்‌ என நான்‌ நினைப்பதுண்டு.
ஒரு ‘நாள்‌ வழக்கமான பல்லவியுடன்‌ ரொனி அலுவலகத்துள்‌ நுளைந்தான்‌.
“சட்னி சீவிக்க முடியாத இடமாகி வருகிறது.. எங்குபோனாலும்‌ தப்பமுடியாது”
“ஏன்‌? என்ன விசயம்‌?” என்று கேட்டேன்‌. கேட்காவிட்‌டாலும்‌ சங்கடம்‌.
“வியட்நாமியர்கள்‌ படு மோசம்‌, இன்று காலை காரை எடுக்கப்‌ போன போது அது. தன்னுடைய இடத்திற்குள்‌ நின்‌றதாக அவன்‌ குறை கூறுகிறான்‌. அவனிடம்‌ கார்கூட இல்லை”
“பிறகு”
“பிறகு என்ன பிறகு? இனி வேறு இடம்‌ பார்க்க வேண்டியது தான்‌! ஒரு வருடத்துள்‌ நாலாவது இடம்‌, நல்ல இடம்‌ என்று இங்கு வந்தால்‌ இங்கேயும்‌ வந்து விட்டார்கள்‌.”
அப்போது றேச்சல்‌ வர, அவளுக்கும்‌ விஷயம்‌ விளம்பப்‌பட்டது.
“ஒருவனோடு … ஏற்பட்ட பிரச்சினைக்கு முழு இனத்தையும்‌ ஏன்‌ சண்டைக்கு இழுக்கறாய்‌?” என்று. அவள்‌ கேட்‌டாள்‌.
“முன்னர்‌. கார்‌. ஒட்டத்‌ தெரியாமல்‌ எனது காரை பின்‌னால்‌ அடித்து நொருக்கியவனும்‌ ஒரு வியட்நாமியன்‌ தான்‌. எனது நண்பன்‌ ஒருவனின்‌ காரை அடித்‌தவனும்‌ அவங்கள்‌ தான்‌. உனக்கு
தெரியாது. அவர்கள்‌ அப்படித்‌தான்‌.”
“எப்படி உன்னால்‌ அவர்‌கள்‌ எல்லாம்‌ வியட்நாமியா்கள்‌ என்று கண்டு பிடிக்க முடிந்தது? ஆசியர்கள்‌ எல்லோரும்‌ எனக்கு ஒரேமாதிரியாகத்தான்‌ தோன்றுகிறார்கள்‌.”
“எனக்கும்தான்‌…. ஆனால்‌ பிரச்சனை தருபவர்கள்‌ பெரும்‌பாலும்‌ வியட்நாமியராகத்தான்‌ இருக்கும்‌, அது சரி  றேச்சல்‌, நீ எப்படித்தான்‌ அந்த இடத்‌தில்‌ சீவிக்கிறாய்‌?” என்று ரொனி கேட்டான்‌. றேச்சல்‌ பல இனங்‌ கள்‌ வசிக்கும்‌ ஒரு புறநகர்‌ பகுதியில்‌ வசிக்கிறாள்‌.
“ஏன்‌? அது நல்ல இடம்‌கானே?”
“இடம்‌ நல்லது தான்‌, ஆட்‌கள்‌ எப்படி? அயலவர்களை சமாளிக்க முடிகிறதா?”
“உன்னையே உனது அயலவர்கள்‌  சமாளிக்கிறார்களே? அதை விட எனக்கு ஒரு சிரமமும்‌ இல்லை. நல்ல காலம்‌, நான்‌ இருக்குமிடத்தில்‌ நீ இல்லை” என்று புன்னகையுடன்‌ றேச்சல்‌
சொல்ல, அவளிடமிருந்து நழுவி ரொனி என்னில்‌ தொற்றினான்‌..
“ஆசியர்கள்‌, குறிப்பாக வியட்நாமியர்கள்‌, நாகரீகமற்றவர்கள். மற்ற இனத்தவர்களுடன்‌ சினேகமாக பழக மாட்டார்‌கள்‌. நீ என்ன சொல்கிறாய்‌?”
“இருக்கலாம்‌. எனக்கு அவ்‌வளவாக அனுபவமில்லை” என்று சமாளிக்க பார்த்தேன்‌, அவன்‌ விடுவதாயில்லை.
“இப்போது பார்‌. யுவான்‌ உன்னைப்‌ போலவா? அவனுடைய நடத்தைதான்‌ அவனது வேலை போக காரணமாயிற்று. மற்றவர்களை மதிக்க மாட்டார்‌கள்‌, தாங்கள்‌ தான்‌ எல்லாம்‌ தெரிந்தவர்கள்‌ என்ற இறுமாப்பு”
இப்படி ௮ங்கு வேலைசெய்‌யும்‌ தனிப்பட்டவர்களை ரொனி தாக்கத்‌ தொடங்கும்‌ போதுறேச்சல்‌ தனது வேலையில்‌ நுளைந்து விடுவாள்‌. நான்‌ வழக்‌கமாக‌ “ஆமாம்‌ சாமி’ தான்‌! யுவான்‌ தொழில்‌ விஷயத்தில்‌ அனுபவஸ்தன்‌ . அவனிடம்‌ நானும்‌ ஒருமுறை அடிபட்டதினால்‌ ஆமாம்‌ போடுவது இந்த  சந்தர்ப்பத்தில்‌ அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை. ஆனால்‌ ஆசியர்களை பொதுவாக அவன்‌ ஏசும்‌ போது மனசு பெரும்‌ சங்கடப்படும்‌. தவிர்க்க முடியவில்லை, எங்களை இவர்‌கள்‌ ஆசியர்களாக எடுத்துக்‌ கொள்வதில்லை. இருந்தாலும்‌ நாம்‌ ஆசியர்கள்‌ என்ற நிதர்சனத்தை என்னால்‌ நிராகரிக்க இயலவில்லை.
தர்க்கத்திற்குரிய விஷயங்‌களை அவுஸ்ரேலிய அலுவலக நண்பர்கள்‌ எந்தக்‌ காலத்திலும்‌ தவிர்த்துக்‌ கொள்வார்கள்‌. தொழில்‌ விஷயத்திலும்‌ அது செல்லும்‌. ஆனால்‌ ரொனி எந்தவித தயக்கமும்‌ இன்றி தனது இனவாதக்கருத்துக்களை சொல்‌லி விடுவான்‌. நானும்‌ அவனுடன் சேர்ந்து சீனர்களின்‌ சின்னத்‌
தனம்‌ பற்றி கதைப்பதன்‌ மூலம்‌ பிழைத்துக்‌ கொள்வேன்‌. பக்கத்‌திலுள்ள பற்றிக்‌ புன்னகைத்துக்‌
கொள்வான்‌. ஒப்பந்த அடிப்படையில்‌ இங்கு வேலையிற்‌ சேர்ந்த பற்றிக்‌ பத்து வருடங்களுக்கு முன்னர்‌ அக்கரை பச்சையை நாடி பிரிட்டனிலிருந்து குடியேறியவன்‌  வாயைத்‌ திறக்காமலே கதைக்கும்‌ வல்லமை இவனுக்கு உண்டு. எந்த விவாதங்களிலும்‌, நிரந்தரமாக அவனது முகத்தில்‌
ஓட்டிக்‌ வைத்துள்ள ஏரிப்பை வீசிவிட்டு பக்கம்‌ சாராத பக்குவவாதி போல்‌ வேலையில்‌ தியானித்து விடுவான்‌, நிமிடங்‌களை டொலர்களால்‌ மாற்றீடு செய்பவன்‌. விதண்டாவாதங்களில்‌ அதை வீணடிக்க முடியாதுதானே, வளைகுடா யுத்தத்தில்‌ மட்டும்‌ அவனால்‌ வாயை மூடிக்‌கொண்டிருக்க முடியவில்லை.
றேச்சலின்‌ சமாதானம்‌ எவ்‌வளவு பிற்போக்கானது என்று நிரூபிக்க ரொனியை விட பற்றிக்‌தான்‌ அதிக பிரயாசைப்‌பட்டதாக ஞாபகம்‌.
நாளாவட்டத்தில்‌ ரொனி male chauvinis எனப்‌ பெண்‌களால்‌. வர்ணிக்கப்பட்டான்‌. அவன்‌ தனது கொம்பியூட்டரை “திஸ்‌ வுமன்‌” என்று அழைப்பதும்‌, கொம்பியூட்டரில்‌ ஒரு நிர்வாணப்‌ பெண்‌ நடமாடும்‌ தோற்றத்தை வரவழைத்து பெண்களுக்குக்‌ காட்டுவதும்‌ இதற்குக்‌ காரணங்களாயிருக்கலாம்‌.
பின்னர்‌ நடந்த ஒரு சம்பவம்தான்‌ என்னை மிகவும்‌ தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கியது. தகவல்களை கொம்பியூட்‌டரில்‌ ஒழுங்கு படுத்தும்‌ முறை பற்றி கம்பெனி இயக்குனருக்கும்‌ ரொனிக்குமிடையில்‌ கருத்து, வேறுபாடு, நான்‌ ஏற்பாடு செய்‌த முறையே வழக்கத்தில்‌ இருந்தது. அதன்படி செய்வதே தகுந்தது என இயக்குனர்‌ சொன்னதை அவன்‌ ஏற்கவில்லை.
“ஏன்‌ இப்படியும்‌ செய்யலாம்‌தானே? இதில்‌ என்ன தவறு? இலகுவில்‌ விளங்கக்‌ கூடியதாகவும்‌ இருக்கின்றது!” இது ரொனி.
“என்றாலும்‌ ஒரு அலுவலகத்துள்‌ இரு வேறு முறைகளைப்‌ பயன்படுத்த முடியாது.”
“அப்படி என்றால்‌ இந்த முறையையே நடைமுறைப்‌படுத்தலாம்‌ தானே? இதில்‌ வேறுபடுத்துவது இலகுவாகும்‌,”
மேலும்‌ விவாதிப்பதில்‌ அர்த்தமில்லை என்றுணர்ந்த இயக்குனர்‌, “எது எப்படி இருந்‌தாலும்‌ இங்கு ஏற்கனவே உள்ள முறைப்படியே செய்யும்‌’ என்று கட்டளை இடுவது  போல்‌ சொல்லிச்‌ சென்றார்‌. நான்‌ இயக்குனரின்‌ கருத்தின்‌ நியாயத்தை அமைதியாக விளங்கப்‌படுத்தினேன்‌. அவன்‌ ஏற்றுக்‌ கொண்டானோ என்னவோ?
“அவர்களுடைய கம்பெனி, எனக்‌கென்ன? அவர்கள்‌ சொன்ன மாதிரியே செய்கின்‌றேன்‌!” என்று அலுத்துக்‌கொண்டான்‌.
இது போல்‌ பல சந்தர்ப்பங்‌களில்‌ அவனுக்கும்‌ மேலதிகாரிகளுக்கும்‌ இடையே விவாதங்கள்‌ ஏற்பட்டன. தொழில்நுட்ப விடயங்களில்‌ ரொனி அவர்களைவிட அதிக அனுபவமுடையவனாக காணப்பட்டான்‌. அவனே பல விடயங்களில்‌ சரி போல்‌ தோன்‌றியது. ஆனால்‌, அவன்‌ சொல்கின்ற முறையால்‌ அவனுடைய சரியான கருத்துக்களும் ஏற்கப்‌படாமல்  போய்‌விடுகின்றன.
சுற்றி சுற்றி வந்து கடைசியில்‌ ரொனியே சரி என்று கண்ட சந்தர்ப்பங்களும்‌ உண்டு. இந்த நேரங்களில்‌ அவன்‌ சுடும்‌ சினத்‌துக்குள்ளாவான்‌.
பற்றிக்கினுடைய ஒப்பந்த காலம்‌ முடிவடைந்து விட்டது. கம்பெனிக்கு தொடர்ந்து அவனை வைத்திருக்க கூடியளவு வேலை கிடைக்கவில்லை. அவன்‌சொல்லும்போது ரொனி மிகுந்த
விசனப்பட்டான்‌. அடுத்தது தனக்குத்தான்‌ என்று மனசார நம்பினான்‌, ஆனால்‌ பற்றிக்‌ அது
பற்றி அலட்டிக்‌ கொள்ளவில்லை. ஏற்கெனவே இங்கிலாந்து திரும்புவதாக முடிவெடுத்திருந்‌தான்‌. அவனது மூன்றாவது வீட்டை விற்க வேண்டி வந்தவுடனேயே “இனி அவுஸ்ரேலியா சரிப்படாது”  என முடிவெடுத்ததாக சொல்லிக்‌ கொண்டான்‌.
வீடு விற்பனையில்‌ மனைவியுடன்‌. வார்த்தை மோதல்கள்‌ ஏற்‌பட்டதாக ரொனிதான்‌ சொன்‌னான்‌. அது பெரிய விஷயமா? இனம்‌ இனம்‌ நமது வீடுகளில்‌. நடப்பதுதானே? இது, அப்படி
இல்லையாம்‌. தொடர்த்த மோதல்கள்‌ மணமுறிவில்‌ முடியலாம்‌ ஆனால்‌ தான்‌ பற்றிக்கில்‌: எத்த “அசுமா’த்தத்தையும்‌ காணவில்லை. சில நாள்களில்‌ பற்றிக்‌ இங்கிலாந்து சென்று விட்டதாக தகவல்‌ கிடைத்தது.
அன்று வேலையை எப்படியும்‌ முடித்துவிட வேண்டுமென்ற தேவையால்‌   மதிய இடைவேளைக்கும்‌ வெளியில்‌ செல்லாமல்‌ நானும்‌ ரொனியும்‌ வேலையில்‌ மூழ்கி இருந்தபோது, ரொனியை இயக்குனர்‌ சில நிமிடங்களுக்கு வரச்‌ சொன்‌னார்‌.
“இத்த நேரத்தில்‌ இவர்‌ வேறு’ என்று அலுத்துக்‌கொண்டே சென்றான்‌. சென்றவன்‌ வேறொரு முகத்துடன்‌ மெதுவாக வந்தான்‌. அவசரமான நேரங்களில்‌ பாய்ந்து நடக்கும்‌ பழக்கமுள்ள ரொனி ஆறுதலாக வருவது ஆபத்தின்‌ அடையாளம்‌ என்றுணர்ந்த நான்‌, “ஏதாவது பிரச்சனையா?” என்றேன்‌.
“இவங்கள்‌ எல்லாம்‌ Bastards. ‘- அவன்‌ வெடித்‌தான்‌.
“என்ன நடந்தது?’
“என்னை நிப்பாட்டி விட்‌டார்கள்‌. இன்னும்‌ . ஒரு வாரத்‌தான்‌ வேலை,”
சென்ற மாதம்தான் எமது அலுவலகத்தில்‌ வேலை செய்த எட்டுப்‌ பேர்‌ வீட்டுக்கு அனுப்பப்‌பட்டு மற்றவர்களின்‌ சம்பளங்களில்‌ பத்து வீத சுருக்கமும்‌ ஏற்‌பட்டது. இருபது வருடங்களில்‌ அவுஸ்திரேலியா அனுபவிக்கின்ற மோசமான பொருளாதார தேக்‌கம்‌ இதற்கு உபயமளித்தது. கட்டாயம்‌ தேவையானவர்களே எஞ்சியிருந்தனர்‌. இனி ஆம்‌, குறைப்புக்கு அவசியம் ‌ஏற்படாது என்று உத்தரவாதமும்‌ தந்தனர்‌. ஆனால்‌ இன்று…
இது ரொனிக்கு இந்த வருடத்துள்‌ நடந்த மூன்றாவது வேலை மறுப்பு, இத்த நாட்டில்‌ .சர்வசாதாரண நிகழ்ச்சி இது. அடுத்த நாள்‌ வந்த ரொனி, “நான்‌ போத்துகளுக்கு போகிறேன்‌. உமக்கு ஒன்று சொல்லுகின்றேன்‌. இவர்கள்‌ இனவாதிகள்‌. நானும்‌ நீயும்தான்‌ எஞ்சியுள்ள அந்நியர்கள்‌. இப்போது எனக்கு, இனி உனக்கு வரலாம்‌. இவர்களுக்கு  இனி எம்மைத்‌ தேவையில்லை. இப்போதே வேறு வேலை ஒன்று. தேடு” என்றான்‌.

“நீயும்‌ முயலலாமே!*“இனிப்‌ போதும்‌. என்னால்‌ தாங்கேலாது!”

உழைப்பைப்‌ பண்டமாக விற்று வாங்கும்‌ வர்த்தக உலகில்‌. மனித நேயத்தை ரொனி எப்படி எதிர்பார்க்க முடியும்‌? அதை ஏற்கனவே சொந்த நாட்டில்‌ தொலைத்துவிட்டு இங்கு கிடைக்‌கும்‌ என்று தேடி வந்தானோ?

“|போத்துக்களில்‌ போய்‌ என்ன செய்வாய்‌? உனக்குத்‌ தான்‌, அங்குள்ளவா்களைப்‌. பிடிக்காது என்று சொல்வாயே?”

“நான்‌ ஆத்தலயாவுக்கு போகவில்லை.லிஸ்பனுக்குத் தான்‌ போகப்‌ போகிறேன்‌. எனக்கு உறவினர்களைத்தான்‌ பிடிக்காது. ஆனால்‌ என்‌ ஊர்‌ மிகு அழகானது, எங்களுடைய மொழியைப்‌போலவே!” பெருமையாக சொல்‌லிக்‌ கொண்டான்‌.

மெளனமாக இருந்த கம்பி யூட்டரை முடுக்கினேன்‌. “தொய்‌” என்ற இரைச்சலுடன்‌ அது உயிர்த்‌தது. ரொனி நிர்வாணப்‌ பெண்‌ நடமாடும்‌ தோற்றத்தை வரவழைப்பான்‌. காலையடியின்‌ நிலவளத்தை வானோக்கிச்‌ செல்லும்‌ பனை  மரங்களை கம்பியூட்டரில்‌ தோற்றுவிக்க என்மனம்‌ தைரியத்‌தை தேடுகிறதா? என்‌ ஊர் மிக அழகானது, எங்களுடைய மொழியைப்‌ போலவே! என்று கம்பியூட்டர்‌ வசனம்‌ பேசுகறதா?.
வேலையில்‌ மூழ்கினேன்‌.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.