இலக்கியச்சோலை

றியலாஸ் ஆசிரியர் எழுதிய “யசோதரையின் வீடு” நூல் வெளியீடு!… நூருல் ஹுதா உமர்.

ஆசிரியரும், கவிஞருமான மருதமுனையை சேர்ந்த அப்துல் லத்திப் முகம்மட் றியலாஸ் எழுதிய “யசோதரையின் வீடு” எனும் தலைப்பிலான கவிதைத்தொகுப்பு நூலொன்று எதிர்வரும் சனிக்கிழமை (20) காலை மருதமுனை புதுப்புனைவு இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் மருதமுனையில் வெளிவர உள்ளது.

மறைந்த இலக்கியவாதி “கதைசொல்லி எம்.ஐ.எப். ரஊப் அரங்கில்” கலாநிதி சத்தார் எம். பிர்தௌஷின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழாவில் நூல் அறிமுகத்தை எழுத்தாளர் ஜிப்ரி ஹாஸன் நிகழ்த்தவுள்ளதுடன் எழுத்தாளர் உமா வரதராஜன் மற்றும் எழுத்தாளர் அப்துல் றஸாக் ஆகியோர் நூல் பற்றிய கருத்துரையை வழங்கவுள்ளனர். இந்நிகழ்வில் மேலும் பல புகழ் பெற்ற கவிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், பிராந்திய முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *