நிகழ்வுகள்
மாவடிப்பள்ளியில் கல்வியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு!
காரைதீவு பிரதேச, மாவடிப்பள்ளியின் மாவடி பேர்ல்ஸ் விளையாட்டு கழக ஏற்பாட்டில் 32 வருடம் கல்வி சேவைக்கு பணியாற்றிய மாவடிப்பள்ளி கமு/ கமு/ அஷ்ரப் மகா வித்தியாலய முன்னாள் அதிபரும் தற்போதைய சாய்ந்தமருது கமு/கமு/ அல்- ஜலால் வித்தியாலய அதிபருமான எம்.ஐ.எம். சைபூதின், மற்றும் அண்மையில் ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் வை.எம். மனாப், மாவடிப்பள்ளியில் இருந்து பல்கலைக்கழக அனுமதி பெற்ற கே.எப்.நப்லா, எஸ்.எம்.சிம்லா, எப்.முனீரா ஆகிய மாணவிகளுக்கும் வரலாற்றில் முதன் முறையாக மாவடிப்பள்ளியிலிருந்து பொறியீயல் பீடத்திற்கு தெரிவான ஏ.வி.சிஹாப் ஆக்கில் ஆகியோரை பாராட்டி கௌரவமளிக்கும் நிகழ்வு இன்று (25) மாலை கமு/ கமு/ அஷ்ரப் மகா வித்தியாலய மண்டபத்தில் மாவடி பேர்ல்ஸ் விளையாட்டு கழக தலைவர் மௌலவி ஏ.ஜே. எம். அஷ்ரப் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான எம்.என்.எம். றணீஸ் மற்றும் எம்.எம். ஜலீல், மாவடிப்பள்ளி ஜும்மா பள்ளிவாசல் தலைவர் என்.எம்.மஹ்ரூப், கமு/ கமு/ அஷ்ரப் மகா வித்தியாலய அதிபர் எம்.அனீஸ், பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாவடி பேரல்ஸ் விளையாட்டு கழக முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் சமூக விஞ்ஞான மற்றும் கணித ஒலிம்பியாட் போட்டிகளில் தேசிய ரீதியாக சாதனை புரிந்த மாணவன் வை.எச்.பைசூல் ஹைய் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.