சீன-இலங்கை நட்புறவு கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி கொழும்பில் ஆரம்பமாகிறது!
சீன இலங்கை நட்புறவின் அடையாளமாக 08வது வருடமாகவும் நடைபெற உள்ள சீன-இலங்கை நட்புறவு கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ரத்னம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 12 முன்னணி உதைப்பந்து கழகங்கள் மோதவுள்ள இந்த சீன-இலங்கை நட்புறவு கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி 16 போட்டிகளை கொண்டதாக வடிவைக்கப்பட்டுள்ளது.
முதலிடத்தை பெற்றுக்கொள்ளும் அணிக்கு வெற்றிக்கேடயத்துடன் ஒன்றரை லட்சம் ரூபாய் பணப்பரிசும், இரண்டாம் இடத்தை தக்கவைக்கும் அணிக்கு எழுபத்தைந்து ஆயிரம் ரூபாவும் மூன்றாம் நிலை அணிக்கு நாற்பதாயிரம் ரூபா பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி நான்காம் இடத்தை பிடிக்கும் அணி, தொடரின் சிறந்த வீரர், சிறந்த பந்துக்காப்பாளர், ஆட்டநாயகனுக்கும் பெறுமதியான பணப்பரிசும், வெற்றிக்கேடயங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசளிப்பு நிகழ்வில் இலங்கைக்கான சீன தூதுவர் உட்பட அரசியல் பிரமுகர்கள், ராஜதந்திரிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.