கட்டுரைகள்

சீனச் சிலந்தி வலைக்குள் சிக்கிய இலங்கை!… ஏலையாக.க.முருகதாசன்

ஈழத்தமிழர் உரிமைச் பிரச்சினை முடிவில்லாத தொடர்கதையாக எழுபத்திமூன்று ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது.இது ஓருபுறம் இருக்க,இலங்கை எடுப்பார் கைப்பிள்ளையாக, கிள்ளுக்கீரையாக சிலந்தி வலைக்குள் அகப்பட்ட பூச்சியாக தன்னை ஆக்கிக் கொண்டமை கவலையளிக்கும் செயல் மட்டும் அல்ல இலங்கைக் குடிமக்கள் அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தும் செயலுமாகும்.

இலங்கையை தனது வலைக்குள் கொண்டுவர வேண்டுமென்று மிகவும் தெளிவாகத் திட்டமிட்டு ,இலங்கையின் தேவைகளை அறிந்து அதனை நிவர்த்தி செய்து அதை ஒரு பேரம்பேசுதலாக அணுகி சீனா விரித்த சிலந்தி வலைக்குள் இலங்கை விழுந்துவிட்டது.

இனி இலங்கையால் தான் இறைமையுள்ள நாடென்ற ஆளுமைச் சக்தியுடன் ஒரு போதுமே நிமிரவே முடியாது.

கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கம்பராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது.பொதுவாக கடன் வாங்குபவர் கடன் கொடுத்தவரைக் கண்டால் கொஞ்சத் தயக்கம் இருக்கும்,பயமும் இருக்கும்.வாங்கிய கடனுக்கு வட்டி கொடுத்தாலும், நன்றி உணர்வு பயத்தைக் கொடுக்கும்.

கடன் வாங்கியவர்களுக்கு குறித்த தவணைகளில் வட்டியையோ அல்லது குறித்த திகதியில் வாங்கிய கடனை வட்டியுடன் முதலைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் போனால், அதற்கான சூழ்நிலை வருமானக் குறைவால் ஏற்படுமானால் கடன் வாங்கியவன் நிலைதடுமாறி

அவமானப்பட்டு கூனிக்குறுகி தற்கொலை வரையும்கூட கொண்டு சென்றுவிடுவான்.

இது தனிமனித கடன் கொடுக்கல் வாங்கலில் ஏற்படும் நிலவரம்.ஆனால் இன்று வல்லாதிக்க நாடுகள் வளர்முக நாடுகளுக்கும்,வறிய நாடுகளுக்கும் அபிவிருத்திக்கு என்ற பெயரில்,வட்டி அறவிடும் கடன் வட்டியில்லாக் கடன் ,இனமாக கொடுத்தல் என்ற வகையறாக்களுக்குள் கடன்களை கொடுத்து வருகிறார்கள்.

ஆப்படி ஒரு சிக்கலுக்குள் அகப்பட்டு இருக்கும் நாடுதான் நமது நாடான இலங்கை.இந்து சமுத்திரத்திலிருக்கும்; இலங்கை நில அடுக்குப் படைகளின் பாரிய நகர்வினால் இராட்சத கடற்கோள் ஏற்படும் பட்சத்தில் சில வேளை கண்டங்கள் அழிந்துவிடும் நிiயில்கூட தீவாக இருந்தும்கூட மூழ்காமல் அழியாமல் இருக்க வாய்ப்பிருக்குமே தவிர, கடனில் மூழ்கி இலங்கையை பகுதி பகுதியாக இலங்கையை வல்லாதிக்க நாடுகளிடம் இழக்கப் போவது இலங்கையின் வரலாறாகப் போகுது.

கடன் கொடுத்து நிலத்தை அபகரிக்கும் தந்திரத்தை அறிமுகப்படுத்தியவர்கள் யூதர்களே.அவர்களைப்பற்றிய வரலாற்றில் அத்தகவலும் காணக்கிடக்கின்றது.

அவர்கள் கடன் கொடுப்பதும், பிறகு கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாதவர்களிடமிருந்து அவர்களின் காணிகளை அபகரிப்பதுமாக அவர்கள் நிலங்களைப் பெருக்கிக் கொள்வார்கள்.

இச்செயல்பாடு தாயகத்தில் பாமர மக்களின் காணிகளை எப்படி மேட்டுக்குடி மக்கள் அபகரித்தார்கள் என்பதற்கும் வரலாறு உண்டு.படிப்பறிவற்ற கூலித் தொழிலாளிகள் போன்றவர்கள்,ஊருக்குள் உள்ள சில பெரிய மனிதர்களிடம் அப்பப்ப பணத்தை கடனாக வாங்குவார்கள்.

பணத்தைக் கொடுப்பவர்கள் அந்த படிப்பறிவற்ற மக்களிடமிருக்கும் காணிகளை எப்படியும் அபகரிக்க வேண்டுமென்ற திட்டத்தை வைத்திருக்கும் அவர்கள் இவர்களிடம் பணம் வாங்க வரும் போது தாராளமாக கொடுத்து உதவுவார்கள்.

அந்த மக்கள் படிக்கவோ எழுதவோ முடியாதவர்களாகவும் வெறும் பெருவிரல் அடையாளத்தை மட்டுமே இடக்கூடியவர்களாக இருப்பார்கள்.இன்னும் சிலர் கையொப்பம் மட்டுமே போடக்கூடியவர்களாக இருப்பார்கள்.

பணத்தை கடனாக வாங்குபவர்களால் வாங்கிய பணத்தை திருப்பித்தரமுடியாது என்று பணம் கொடுபக்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்.அவர்களின் வருமானமும் செலவும் சமமாக இருக்கும் அல்லது மேலதிக செலவுகளே ஏற்படும்.

இந்த நிலையில் கடன் வாங்குபவர்கள் திருப்பித்தரமுடியாத இக்கட்டான நிலையில் கடன் வாங்கியவர்கள் திக்கித் திணறும் போது,பணம் தராவிட்டால் பரவாயில்லை அந்தக் காணியை கடனுக்கும் வட்டிக்கும் பதிலாக எழுதிவிட்டால் போச்சுது.உந்தக் காணியை வைச்சு நீ என்னு செய்யப் போகிறாய் கந்தன் என்று சொல்ல வேறுவழியின்றி வாங்கிய கடனுக்கு கந்தனின் காணியை கடனாக வாங்கிய கொஞ்சப் பண்த்திற்கே கைநாட்டோ, கையொப்பம் மட்டும் போடுவதற்கு அறிந்து வைத்திருக்கும் பட்சத்தில் கையொப்பமிட்டோ கந்தன் காணியை தாரை வார்த்துக் கொடுத்து விடுவார்.

குடியிருந்த காணியை விட்டு கந்தனைத் துரத்தினால் காணியைப் பராமரிக்க முடியாமல் போய்விடுமே என்பதை உணர்ந்த கடன்கொடுத்து காணியைக் கைப்பற்றியவர் „நீ அங்கேயே இரு’ என்று சொல்லிவிடுவார்;.

தனக்குச் சொந்தமான காணியை விற்ற கந்தனும்,’நான் இப்ப என்ன என்னுடைய காணிக்குள்ளேதான் இருக்கிறேன்’ என கற்பனை கொண்டு வாழ்ந்து வருவான்.

இதை அப்படியே கந்தன் சமன் இலங்கை,கடன் கொடுத்தவர் சமன் சீனா என சிந்தித்துப் பாருங்கள் தெளிவாகவே விளங்கிவிடும் இலங்கை சீனாவுக்கு கொத்தடிமையாகிவிட்டது என்பதை.

இச்சூழ்நிலையை இது ஒரு ஆய்வு சார்ந்த விடயம் என்று சராசரி விளங்காத விசயம் என்றோ யாருமே யோசிக்க வேண்டியதில்லை.

அம்பநாந்தோட்டைத் துறைமுகம், போர்ட் சிற்றி ,வடக்கிலுள்ள நெடுந்தீவு உட்பட இன்னும் இரண்டு தீவுகள் இவையெல்லாம் சீனாவின் ஆளுமைக்குட்பட்ட சீனாவின் நிலங்களாகவிட்டன.சீனாவின் இந்து மென்மையான நில ஆக்கிரமிப்பு இன்னொருவிதமான யூதரிசம்.இலங்கைக்கும் சீனாவக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட ஓப்பந்தத்தில் இலங்கை சார்பாக கையொப்பமிட்டவர்கள் அதற்கான தகுதிவாய்ந்த அதிகாரிகளாக இருந்தாலும் அவர்கள் இலங்கை மக்கள் சார்பாகவே கையொப்பமிட்டுள்ளார்கள்.எனவே இலங்கை மக்களே சீனாவிடம் கடன் வாங்கியவர்;களும்,கையொப்பமிட்டவர்களுமாகும.;

இலங்கை மக்கள் தாங்கள் சுதந்திரமான இறைமையுள்ள நாட்டின் குடிமக்கள் என்று சொல்லிக் கொள்ளவே முடியாது.

எப்பொழுதுமே மனிதன் மகிழ்ச்சியான அமைதியான தருணங்களையே விரும்புவான்.அத்தகு சூழ்நிலைகளை அரசுகள் ஏற்படுத்திக் கொடுத்தும் விடுகின்றன.நாட்டில் ஏற்படும் நெருக்கடி நிலைமைகளையோ அரசுகளின் தவறுகளையோ கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மனித

மனங்களை ஆற்றுப்படுத்துவதற்காக இத்தகு தளங்களை ஏற்படுத்திவிடுவார்கள்.

சீனாவினால் கடலுக்குள் இலங்கை நிலத்துடன் தொடர்புபடுத்துp உருவாக்கப்பட்ட போர்ட் சிற்றி ஒரு களியாட்டுத் தளம் என்பது மட்டுமல்ல இலங்கையையும் இந்தியாவையும் கண்காணிக்கும் நவீன வலையமைப்புக் கொண்ட இடமுந்தான்.

ஒவ்வொரு நாடுகளிலும் இருக்கும் தூதரகங்கள், தாம் நிலைகொண்டிருக்கும் நாடுகளின் அரசியல், பொருளாதாரம்,பாதுகாப்புப் படைகள், கல்வி, நிதித்துறை,ஆட்சி நகர்வு போன்றவற்றை நாளாந்தம் எவ்வாறு உற்றுக் கவனித்து எப்படியெல்லாம் தமது தூதரகங்கள் இருக்கும் நாட்டைக் கையாளுகின்றனவோ அது போன்று போற்சிற்றி களியாட்டு நிலமாகவும் இன்னொரு தூதரகமாகவும் மாறப் போகின்றது.

கடைகள், வீதிகள், களியாட்டு விடுதிகள், நேர்த்தியான வீதிகள், பூங்காக்கள், தியேட்டர்கள், ஆங்காங்கே அழகிய இருக்கைகள் என இலங்கையில் ஒட்டி வைக்கப்பட்ட ஒரு சீனக்குட்டித் தீவாக இந்த போர்ட்சிற்றி மாறிவிடும்.

மண்போட்டு நிரப்பப்பட்ட ஒரு திடல்தானே என அலட்சியம் இலங்கைக்கு பெரும் ஆபத்தையே கொண்டுவரப் போகின்றது.இந்துசமுத்திர கேந்திரத்தில் இருக்கம் இலங்கை முழுமையாக சீனாவின் தளமாகமாகப் பாவிக்கப்பட போவதை இந்தியா பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

ஆசியப் பிராந்தியத்தில் வல்லாதிக்க சக்திகளாக இருப்பவை சீனாவும் இந்தியாவுந்தான். இராணுவக் கட்டமைப்பிலும் பொருளாதாரக் கட்டமைப்பிலும் இரண்டு நாடுகளுமே ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல.

ஆனால் சீனா ஆசியப் பிராந்தியத்தையும் உலகளவில் ஆளுமை செலுத்திக் கொண்டிருப்பதை மறுக்க முடியாது.

வல்லாதிக்க நாடுகள், தமது வல்லமை வலையமைப்பை உலக நாடுகளில் நிலைநிறுத்துவதற்கு எந்தெந்த நாடுகளைத் தளமாக பாவிக்க வேண்டுமென்பதற்கு அந்தந்த நாடுகளில் உள்ள அரசியல் பொருளாதார கட்டமைப்புகளை ஆய்வு செய்வது மட்டுமல்ல அந்தந்து நாடுகளில் உள்ள இன் முரண்பாடுகளின் தாற்பரியங்களை அடிமுதல் நுணிவரை உற்றுக் கவனித்து நாடுகளைக் கையாளுகின்றுன.

இலங்கையின் இணமுரண்பாடுகளும் தமிழர்கள் சார்ந்த உரிமைப் பிரச்சினையும் சீனாவுக்குச் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கின்றன.

 

Loading

One Comment

  1. T.Ilangky Mannan
    சீனாவின் உறவுகள் படிப்படியாக பலப்படுத்த படுபவை. அவர்களின் உதவி கள் நீண்ட காலமாக பலன் தரும் நோக்கத்துடன் உதவப்படுபவை . அவர்கள் ஓர் உலகத்தை நோக்கி பொருளாதார பலத்துடன் பவனி வருகிறார்கள். சர்வதேச உணர்வுடன் நாமும் அதை பயன்படுத்தி இலாபமடையலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button