கட்டுரைகள்

உளவு நிறுவனங்கள்!… 2…. ( கட்டுரை )….. அவதானி.

புதிய புதிய உணவுகளை ருசி பார்ப்பதில் எப்பொழுதுமே மனிதர்களுக்கு விருப்பம் உண்டு.நாக்கு என்பது பல வழிகளில் முக்கியத்துவம் பெறுகின்றது.சொல்வதற்கும் ருசிப்பதற்கும் நாக்கு முக்கியமாகின்றது. சொல்வது என்பதில் இரகசியங்களைச் சொல்லுதல் என்பதும் அடங்கும்.

உணவு என்றவுடன் மனிதனின் மூளை சுவையையே உணருகின்றது.அதனாலேயே உணவகங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

நாடுகள் தமக்குள் ஒற்றுமை இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும், ஒற்றுமையாக இருக்க விரும்பினாலும் அடுத்த நாடுகளின் வளர்ச்சிகள் பற்றி அறிவதையும்,அந்த வளர்ச்சிகள் எவ்வாறு உருவாகின்றன என்பதைக் கவனிக்கவும் விரும்புகின்றன.

இவற்றை உளவு பார்க்க அந்தந்த நாட்டு உணவகங்களும் தமது பங்கையாற்றுகின்றன.உணவகங்களின் தலைமையக அதிகாரிகளை பயன்படுத்துவதும் சாதாரண பணியாளர்களைப் பயன்படுத்துவதும் நடைமுறையில் உண்டு.

சாதாரண மனிதர்கள் உலக நாடுகளில் உள்ளகச் செயல்பாடுகள் பற்றியோ, ஒரு நாட்டின் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்புகளை மற்றைய நாடுகள் அறிந்து கொள்வது பற்றியோ, எடுக்கும் அணுகுமுறைகளையோ முயற்சிகளையோ அறியாதவர்களாக இருக்கிறார்கள்.

ஒரு நாட்டில் வேறு வேறு நிறுவனங்களின் பெயர்களில் கால் பதித்துள்ள வல்லமையாளர்கள் ‘ஒரு நாட்டின் உள்ளீட்டுத் தன்மையை அறிந்து கொள்ள பலரை பல வழிகளிலும் பயன்படுத்துகிறார்கள்.

ஒரு வலுவான சமூகப் பொருளாதரா கட்டமைப்புக்கு மூல காரணமாக இருப்பது பொருளாதாரத் திண்மையும் அந்தந்த நாட்டின் மக்களின் குணாதிசியமும் தேசபக்தியுமே ஆகும்.

இந்த மூன்றினதும் திடகாத்திரத்தை அறிந்து கொள்வதன் மூலமே ஒரு நாட்டின் அரசியல் கட்டமைப்பைச் சிதைக்க முடியும்.ஜேர்மனியைப் பொறுத்தவரைக்கும் ஐரோப்பிய சாம்ராஜத்தை உருவாக்கிய நாடு என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

ஒரு நாடு தனது தலைமைத்துவத்தைப் பேணுவதற்கும், தன்னோடு இணைந்து செயல்படுவதற்கும் மற்றைய நாடுகளைச் சம்மதிக்க வைப்பதற்கும் வலுவான காரணங்கள் வேண்டும். தனது தலைமைத்துவத்தின் இறுக்கமான தன்மையை தனது நாட்டு சராசரி குடிமகனின் வாழ்வினை அடையாளப்படுத்தி காட்ட வேண்டிய அவசியமான நிலை உண்டு.

வல்லரசு நாட்டுக்கு சவாலான நாடு ரஸ்யா என்று ஒரு கருத்து நிலவுகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் உருவாவதற்கு முன்னர் ஒருங்கிணைந்த சோவியத் யூனியன் சவாலான நாடாகவே இருந்தது.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைவுக்குப் பிறகு இன்னொரு சவாலான சாம்ராஜ்யம் ஐரோப்பிய ஒன்றியமுந்தான்.அதே வேளை ரஸ்யா இன்னமும் தனது வல்லரசு வகிபாகத்தை இழக்கவில்லை.

தனக்கு மேல் எந்த நாடுமே இருக்கக்கூடாது என்பதில் வல்லரசு மிக விழிப்பாகவே இருக்கின்றது.இதற்கு இலுமினாட்டிகளின் உதவி தாராளமாகவே கிடைத்து வருகின்றது.

மேலேகூறிய உணவகங்கள் உளவு பார்த்தலுக்கு எவ்வாறு ஒத்துழைக்கின்றது என்பதற்கு உள்ளங்கை நெல்லிக்கனி என்பது போல வெளிப்படையாகவே ஒரு விடயம் தெளிவாகின்றது. அத்தனை உணவகங்களும் வல்லரசின் நிறுவனங்களே.

ஒரு நாட்டுக் குடிமகனின் தேசபக்தியை சிதைத்து உளவு பார்க்க முடியுமா என்பது ஒரு நியாயமான கேள்வி. ஒரு திணைக்களத்தில் வேலை செய்யும் அதிகாரியை நேரிடையாக உளவு சொல்பவராக இந்நிறுவனங்கள் பயன்படுத்தாது.

உணவு நிறுவனங்களில் பணிபுரியும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் அரசின் திணைக்கள அதிகாரிகளுடனோ சாதாரண பணியாளர்களுடனோ ஏற்படுத்திக் கொள்ளும் இயல்பாக தோன்றிய நட்பாகவோ அல்லது தொடர்பாகவோ தோன்றினாலும் அது ஒரு தேவைகருதியே ஏற்படுத்தப்பட்டதாகவே இருக்கும், அது உளவு பார்ப்பவருக்கு மட்டுமே தெரியும்.

வல்லரசு நாட்டின் உளவு பார்க்கும் செயலுக்கு ஒரு ஒப்புவமையைச் சொல்லலாம்.’இந்தக் குளத்தில் எந்த மீனுமே இருக்காது’ என பொதுவாக நினைக்கையில் ‘அந்தக் குளத்திலும் வல்லரசு தூண்டிலைப் போட்டு வைக்கும் என்பர். ஏனெனில் எங்கேயாவது ஒளிந்திருக்கம் மீன் எப்போதாவது தூண்டிலில் சிக்கும் என்பதற்காகவே.

இங்கே தூண்டில் என்பது உளவு பார்த்தல் மீன் என்பது கட்டமைப்பு இரகசியம்.ஒருவருடன் ஒருவர் இயல்பாக ஒரு திணைக்களத்தின் செயல்பாடு பற்றிப் பேசிக் கொள்வது என்பது ஒன்றுக்கும் உதவாத விடயமாகத் தோன்றினாலும் அது வல்லரசின் அரசியல் நகர்த்தலுக்கு இரகசியமே.

வல்லரசு ஒரு நாட்டின் மீது கண்ணுக்குத் தெரியாத வலையை விரித்துவிட்டு அந்த வலைக்கடட்மைப்பில் ஒரு நாட்டின் கட்டமைப்பையும் பகுதி பகுதியாகப் பிரித்து, பிரித்த பகுதிகளை இன்னும் பல பகுதிகளாகப் பிரித்து ஆராயத் தொடங்குகிறது.

இதை இப்படிப் பார்க்கலாம். ஒரு நாட்டின் வரைபடத்திற்கு மேல் குறக்கும் நெடுக்குமாக கோடுகள் இடப்படும் போது சற்சதுர வடிவிலோ நீள்வடிவிலோ பல பகுதிகள் உருவாகும்.

இதையே ஒரு நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு, கனிவளங்கள், தொழிற்சாலைகள், கல்விநிறுவனங்கள், விஞ்ஞானக் கழகங்கள், மருத்துவ நிலையங்கள், மருத்துவக் கட்டமைப்பு போன்றவற்றை இந்த வலைவிரிப்புக்குள் கொண்டு வருதலும்,அவற்றை பகுதி பகுதியாக பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் உள்ள அவை சார்ந்த அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுதலும் ஆகும்.

உணவகங்கள் மீதான மக்கள் வைத்திருக்கும் தொடர்பு அவர்களை இசைவாக்கம் பெற்ற மனிதர்களாக மாற்றிவிடுகின்றது.இந்த இசைவாக்கத்திற்கு உள்ளாவதன் மூலம் எவ்வித பாதிப்பும் ஒரு நாட்டுக்கு ஏற்படாது என்று பொதுப்படையாகக் கருதினாலும் பாதிப்பு ஏற்படுத்தல் என்பதே வல்லரசின் நோக்கம். இசைவாக்கம் என்பது வல்லரசின் உத்திமுறை.

ஒரு தாளில் ஒவ்வொரு உணவகத்தையும் ஒரு புள்ளியாக இட்டு, அவ்வுணகங்களில் உண்போரை அப்புள்ளியைச் சுற்றி முதலில் சிறிய வட்டம் எனத் தொடங்கி, பெரும் வட்டங்களாக ; வளர்ந்துவிடும்;.

உதாரணமாக ஒரு கோடி மக்கள் இருக்கும் நாட்டில் அந்த ஒரு கோடி மக்கள் மத்தியில் உணவகங்களை புள்ளிகளாக இட்டு, அந்தப் புள்ளியை சுற்றி வட்டமாக வளையங்களை ஏற்படுத்திக் கொள்ளும் போது ஒவ்வொரு உணவகப் புள்ளி வளையங்களும், இன்னொரு உணவகப் புள்ளி வளையகத்தை தொட்டு நிற்கும் அளவுக்கு வளர்ந்து விடும்.

இந்த வட்டத்திற்குள் அகப்பட்டு நிற்பவர்களை குறுக்கும் நெடுக்குமாக இருக்கும் வலைப்பின்னல் அவர்களை உணவக அனுதாபிகளாக, ஆர்வலர்களாக மாற்றிவிடும்.இவர்களிடம் எதேச்சையாக அறியப்படும் தகவல்கள் திட்டமிடப்பட்டுப் பெறும் தகவலேயாகும்.

ஒரு வீட்டுகு;குள் நுழைவதற்காக இருக்கும் வாசல்படிக்கட்டு போல இத்தகவல் வல்லரசுக்கு ஒரு நாட்டின் இரகசியங்களை அறிந்து கொள்ளும் படிக்கட்டேயாகும்.

ஒரு உதாரணமாக’ 2020 ஆம் ஆண்டுடன் நிலக்கரி ஒரு நாட்டில் முடிவடைந்துவிடும், அந்த நாடு வேறு நாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்கும் திட்டத்தைக் கொண்டிருக்கிறது என்பது ஒரு செய்தி.

இது நாட்டு மக்களுக்குச் செய்தி. வல்லரசுக்கு இது தூண்டில் போட கிடைத்த இரகசியம்.

இத்தகவல் எத்திணைக்களம் சார்ந்ததோ, எந்த அமைச்சைச் சார்ந்ததோ நிலக்கரிப் பற்றாக்குறையும் ஈடுகட்ட எடுக்கப் போகும் நடவடிக்கை தொடர்பாக எந்தெந்த அணுகுமுறைகளைக் கையாளப் போகிறார்கள்

என்பதைக் கண்டறிவதில் அத்திணைக்களம் ஊடாக அல்லது அமைச்சு ஊடாக ‘இயல்பியல்’ அறிதலைக் கையாளுவார்கள்.

குறிப்பாக உணவகத் தலைமையக அதிகாரிகூட வேறு நாட்டுக்கு உளவு பார்ப்பார். நிலக்கரி அமைச்சகத்தில் வேலை செய்பவரிடம் சில இரகசியங்களை இரகசியம் அல்லாதது போல கேட்டறிவார் பேச்சு வாக்கில்.

சொல்பவரும்’நானென்ன பெரிய ஆளா’ என்ற நினைப்பில் மிகச் சாதாரணமாகச் சொல்லிவிடுவார். அதை அவர் ‘ இது ஒரு பெரிய இரகசியமே அல்ல என நினைப்பார். ஆனால் அவர் சொல்லிய தகவலை அந்நாட்டுக்கு எதிரான இரகசியமாக மாற்றி அந்நாட்டின் அரசியல் கட்மைப்பை சிதைக்க முடியும்.

 

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button