உளவு பார்க்கும் நிறுவனங்கள்!…. 1….. ( கட்டுரை ) …. அவதானி.

உலக நாடுகளின் அரசியல் நடவடிக்கைகள் யாவும் ஒரு இடத்தில் குவிக்கப்பட்டு எந்த அரசியலை எந்த நாடு செய்ய வேண்டுமென்ற தீர்மானத்தை எடுக்கும் வல்லமையை இலுமினாட்டிகளும் அமெரிக்காவும் இணைந்து செயலாற்றி வெற்றி நிலையை அடைந்துள்ள தவிர்க்க முடியாத நிலைக்கு உலகம் தள்ளப்பட்டுவிட்டது.
பணம் என்ற ஒரு பெரும் சக்தி ஒவ்வொரு மனிதனையும் ஆக்கிரமித்து அவனை சிலந்தி வலைக்குள் அகப்பட்ட பூச்சியின் நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
மனிதனை இயங்க வைப்பது அறிவு என்றாலும் அந்த அறிவை பயன்படுத்த அவனுடைய உடல் காத்திரமாக இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் மனிதன் உயிர் வாழ்வதற்கும் உணவு மிக முக்கியமாகின்றது. உடல் உணவைத் தேடும் போது பசி ஏற்படுகின்றது. விஞ்ஞானத்தின் விளைவாகவும் பொருளாதார உற்பத்திப் போட்டிகளாலும் மனிதர்கள் மிக விரைவாகவும் பதட்டத்துடனுமே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
தன்னைவிட்டு விநாடிப் பொழுதுகளாக நழுவிச் செல்லும் நேரத்தை துரத்திப் பிடிப்பதற்காக நேரத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் மனிதனுக்கு உணவு தேவைப்படுகின்ற போது ஆறஅமர இருந்து உணவு உண்ணக்கூட அவனுக்கு நேரமில்லை.
வேகமாக உண்ணக்கூடிய துரிதமான உணவை ; தேடிச் செல்லும் அந்த மனிதர்களை தமக்குரிய மனிதர்களாக
மாற்றுவதில் உலகின் பெரும் பகுதியைக் கையயப்படுத்தி உள்ள வல்லமையாளர்கள் வெற்றி கண்டுள்ளார்கள்.
ஒவ்வொரு நாடும் அது சிறிய நாடாக இருந்தாலென்ன வல்லரசு நாடுகளாக இருந்தாலென்ன அந்தந்த நாடுகளின் உள்நாட்டு விடயங்களையும் அவர்கள் கையாளுகின்ற வெளிநாட்டு விடயங்களையும் அறிந்து கொள்வதற்காக பல்வேறுவிதமான அணுகுமுறையில் உளவு நிறுவனங்கள் ஒற்றர்களை நியமித்துள்ளார்கள்.
ஒரு நாட்டின் பலம் என்ன பலவீனம் என்ன, பொருளாதாரக் கட்டமைப்புகள் என்ன என்பதைக் கண்டறிவதற்காக உலக அதிகார மையம் பெரும் வலையமைப்பை அமைத்து வைத்திருக்கின்றன.
அமெரிக்காவின் துரித உணவகங்களான மக்டனால்,பெகர் அரசன், துணைப் பாதை, கோழிப்பொரியல் கடை என்பன இன்று உலக நாடுகள் எங்கும் அவை நிலை கொண்டுள்ளன.
இத்தகு உணவகங்களை தமது நாடுகளில் அமைத்துக் கொள்ள ஆரம்ப காலங்களில் மறுத்து வந்த நாடுகளை சம்மதிக்க வைத்துள்ளனர் தமது செல்வாக்கினைப் பயன்படுத்துபவர்கள்.
குறிப்பாக சிறுவர்களையும் இளமட்டங்களையும் வரவழைப்பதற்காக தூண்டில் போட்டு இழுப்பது போல, இவ்வுணவகங்கள் பல உத்திமுறைகளையும் அணுகுமுறைகளையும் கையாண்டு துரித உணவுப் பிரியர்களைப் பெருக்கியுள்ளது.
சிறுவர்களுக்கான சிறு சிறு விளையாட்டுப் பொருட்களை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி அவர்களை அவாக் கொள்ள வைத்து பெற்றோர்களையும் அழைத்துச் செல்ல வைக்கின்றன இத்தகு உணவகங்கள்.
தனக்கென ஒரு உணவக இலச்சினையை உருவாக்கி , அந்த இலச்சிணை எங்கெல்லாம் தென்படுகிறதோ அதை நோக்கி சிறுவர்களை இழுத்துச் செல்லும் போது பெற்றோரும் அவர்களுடனே செல்வதும், பெற்றோரும் அந்த துரித உணவகத்தில் தமக்கு விருப்பமான உணவை வாங்கி உண்பதும் தவிர்க்க முடியாத நிலையாகிவிடுகின்றது.
இளமட்டங்கள் மனது எப்பொழுதுமே ஆசைகளால் நிரம்பி
வழியும் மனதுதான்.தமக்குக் கட்டுப்படியாகும் செலவுக்குள் தமது காதலியுடனோ அல்லது காதலனுடனோ அல்லது நண்பர்களுடனோ உணவு உண்ண இத்தகு துரித உணவகங்களையே நாடி வருகிறார்கள்.
இந்த உணவகங்கள் மீது அவர்களுக்கு ஏற்படும் ஈர்ப்பு நாளடைவில் மனக்காந்த சக்தியை உருவாக்கி விடுகின்றது. அதனால் உணவகம் என்ற மையப் புள்ளியை நோக்கி உணவுப் பிரியர்கள் அதற்குரிய நிரந்தர விரும்பிகளாக மாறி விடுகின்றனர்.
ஒரு நாட்டில் ஆயிரக்கணக்கான இத்தகு துரித உணவகங்கள் இருக்குமாயின் பல இலட்சக்கணக்கான மக்கள் அந்தந்த உணவகங்களை நோக்கிய சார்பு நிலைக்குள்ளாகிறார்கள்.
இந்த உணவகங்கள் எந்த நாட்டினுடையயோ அந்த நாட்டுக்கு அனுதாபிகளாகவும் மோகம் கொண்டவர்களாகவும் கிட்டத்தட்ட அந்த நாட்டுக்குரிய பிரசைகளாகவும் மாறி விடுகிறார்கள்.
தனது உளவு வேலைகளை சுலபமாக்க இத்தகு உணவுப் பிரியர்களும் ஒற்றர்களாகச் செயல்படத் தொடங்கி விடுவார்கள்.உளவு நிறுவனங்களால் சார்புநிலை மக்கள் ஒற்றர்களாக கையாளப்படுகின்றார்கள்.
(தொடரும்)
![]()