தேனீ இணையதள ஆசிரியரும் ,கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பல்வேறு தளங்களில் சமூக அக்கறையுடன் இயங்கியவருமான ஜெமினி என்று அழைக்கப்படும் கங்காதரன் இன்று எங்களை விட்டு பிரிந்து விட்டார் என்ற துயரச் செய்தி எமக்கு கிடைத்துள்ளதை தோழர்கள், நண்பர்கள் அனைவருக்கும் கனத்த மனத்துடன் தெரிவித்து கொள்ளுகிறேன். அவருடனான என்னுடைய 35 வருடங்களுக்கு மேலான தோழமையும்,நட்பும் , சமூக செயற்பாடுகளும் அவர் இவ்வுலகை விட்டு பிரிந்தபோதும் கனதியான நினைவுகளாக நிலைத்திருக்கும். பிறிதொரு சந்தர்ப்பத்தில் அவருடைய கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பல்வேறு தளங்களில் சமூக அக்கறையுடன் நாம் இயங்கியதை பதிவு செய்வேன்.தோழன் மரணம் வாழ்வின் ஒரு முடிவல்ல. நீ என்றும் எம்முடன் நிலைத்திருப்பாய்.