முகநூல்

முருகப்பெருமான் கட்டியிருந்த கோமணத்தையும் உருவ தொடங்கி விட்டது புத்தமதம்!..

தொல்பொருள் என்று தொலைந்து போகிறது தமிழர் தேசம் முருகப்பெருமான் கட்டியிருந்த கோமணத்தையும் உருவ தொடங்கி விட்டது புத்தமதம்….
கடந்த ஆட்சியில் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தை வட்டியோடு வளைத்து போடுகிறது கோத்தபாய அரசு. தமிழர்களை கொன்று குவித்து புதைத்த இடங்களில் எல்லாம் புத்த விகாரைகளை கட்டி இது புத்தனின் பூமி என்று அடையாளப்படுத்துகிறது….
இளைஞர்களின் உணர்ச்சியையும் மக்களின் எழுச்சியையும் எதிர்பார்க்கிறது மீண்டும் எங்களை கொன்று குவிக்க இந்த அரசு. உயிர்களைக் கொன்று ரத்தத்தைக் குடித்த சிங்கள கடும்போக்கு வாதிகளுக்கு இன்னும் பசி போகவில்லை.தொடர்ந்து வேட்டை நாய்கள் போல் எங்களை வேட்டையாட தான் துடிக்கிறார்கள்….
எங்களை காப்பாற்றுவான் என்று கடவுளிடம் கையெடுத்து கும்பிடுவதற்கு எங்கள் கடவுளுக்கு இடமில்லை. புத்தனை கும்பிடச் சொல்கிறது சிங்கள தேசம்.வீதியில் இறங்கி எத்தனை முறை இனி ஆர்ப்பாட்டம் செய்வது போராடுவது இந்த கடும்போக்கு சிங்களப் பேரினவாதத்துடன்….
அகிம்சை வழியில் போராடினோம் அடக்கினார்கள் ஆயுத வழியில் போராடினோம் சர்வதேசத்தை கொண்டு எங்களை அடக்கினார்கள்.ஆகவே இனி இவர்களுடன் பேசிப் பயனில்லை எவர்கள் எம்மை அடக்குவதற்கு இந்த சிங்கள தேசத்திற்கு கை கொடுத்தார்களோ அவர்களிடம் எங்களுக்கான நீதியை எதிர்பார்ப்போம்.சர்வதேசத்தை திரும்பிப்பார்க்க வையுங்கள் அதற்கான வழிமுறைகளை தேடுங்கள் சர்வதேச தூதரகங்களை முற்றுகையிட்டு முறையிடுங்கள்.வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பூமி என்பதை அங்கீகரிக்கும் வரை தொடருங்கள்…..
ஆதங்கத்துடன்
அரசியல் சாணக்கியன்….
Manikam Sinnathambi

அவர்களது பதிவு.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.