முகநூல்
தேர்தல் ஆணையத்துக்கு!
ஐயா இனியும் எங்களை முட்டாளா ஆக்க வேண்டாம்
தேர்தல் என்ற பெயரில் ?
என் வரி பணத்தை கோடி கோடியாக செலவு செய்து இனி வரும் தேர்தலிலும் வீணடிக்க வேண்டாம்
இனி நீங்களே உங்க EVM யாரை தேர்வு செய்யுதோ அவரையை நாங்கள் ஏற்று கொள்கிறோம்
சும்மா இந்தியா ஒரு ஜனநாயக நாடு உன் ஜனநாயக கடமையை ஆற்று என்று என்னை சொல்ல வேண்டாம்
நீண்ட வரிசையில் நின்று
நீண்ட நேரம் காத்திருந்து
கையில் கருமை கொண்டு மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் வந்தால் ?
ஒரு ஒரு தேர்தலிலும்
என் கையில் பட்ட மையை விட என் முகத்தில் பூசபட்ட மைதான் அதிகம் ..
யாரை கேட்டாலும் மாற்றத்துக்கு தான் ஒட்டு போட்டேன் என்று சொல்கிறான்
ஆனால் எதுவும் மாறவில்லை
ஆகையால் நாங்கள் ஒரு மனதாக மாறி கொள்கிறோம்
என் ஒட்டுக்கு எந்த வலிமையும் இல்லை என்று நன்றாக தெரிகிறது
ஆளுபவன்
அதிகாரி
தேர்தல் ஆணையம்
நீங்க தான் எல்லா முடிவும் செய்யும் போது
இடையில் நாங்கள் எதற்கு ?
இவர் தான் பிரதமர்
இவர் தான் முதல்வர்
என்று நீங்களே சொல்லி விடுங்கள் அதை விட்டு
இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று சொல்லி
எங்களை பைத்தியகாரனாக ரோட்டில் நிறுத்த வேண்டாம்
வாக்கு சீட்டு என்றால்
என்னிடம் ஒரு ஆதாரமாவதும் இருக்கும்
EVM மிஷினிடம் என்ன ஆதாரம் கேக்க முடியும்
ATM கார்டு முதல்
என் போன் இ மெயில் என்று ஹைடெக் திருடு நடக்கும் இந்த காலத்தில்
EVM மீது எனக்கு நம்பிக்கை இல்லை
இதை நான் சொன்னால் யாரும் கேக்க போவதும் இல்லை
என் இந்திய நாடு என்னையும் ஒரு மனிதனா நினைப்பதை ஒட்டு போடுவதில் மட்டும் தான்
இப்ப அதுக்கு
EVM வந்து விட்டது ?
இனி எனக்கு என்ன வேலை
முடிவு எல்லாம் உங்க கையில் இருக்கும் போது
நான் என்ன செய்து விட போகிறேன் இந்த நாட்டில் …
வெள்ளைகாரன் என்னை அடிமையாக மட்டுமே வைத்து இருந்தான்
ஆனால் நீங்க அடிமையோடு அடி முட்டாளாக ஆக்கி விட்டீர்கள்
உலக வல்லரசு நாடு கூட இன்னும் வாக்கு சீட்டில் தான் இருக்கு
கோ கொரோனா
கோ கொரோனா
என்று கோஷம் போடும் நாங்கள்
High Technology ல் இருக்கோம் …
Super super….
நன்றி
இரா.வெங்கடேஷ்
சவுத் ஆப்ரிக்கா