முகநூல்
மனம் மாறும் சிங்களம்!
இலங்கை “சிங்கள பெளத்த நாடு” என்று கங்கணம் கட்டுவது மகா தவறு;;
** உலகில் முஸ்லிம்களுக்கு என்று 25 நாடுகளும், தமிழர்களுக்கென்று 5 நாடுகளும் இருக்கையில், சிங்களவருக்கென்று இந்த “இலங்கை” யை தவிர வேறு நாடு இல்லை என்று கோஷம் போடுவது தவறு;;
** சிங்களம் பேசும் மக்கள் உலகில் கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, இத்தாலி போன்ற பல நாடுளில் வசிக்கின்றனர்;
** எங்க ஜனாதிபதி கூட புலம் பெயர் நாடான அமெரிக்காவில்தான் அந்நிய நாட்டு பிரஜா உரிமையை பெற்றிருந்தார்;;
** சிங்கள பெளத்த நாடு இல்லாமல் போய் விடும் என்று பூதாகாரமாக மக்கள் மனங்களில் விஷத்தை தெளித்து விடுவது கொடுமை;
** இந்த நிலைமையை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும்;;
** சிங்கள பெண்மணிகள் இஸ்லாமிய நாடுகளில் கடினமான கூலி வேலைகளை செய்கின்றனர்;;
** இந்த இனவாத கொள்கையினால் தமிழ் முஸ்லிம்கள் ஓரங் கட்டப் படுகின்றனர்;; தமிழர், முஸ்லிம்கள் இங்கு வாழ உரிமை இல்லை என்று கூற முடியாது;; அது அப்பட்டமான தவறு;;
** ஏன், வரலாறு என்ன சொல்கிறது;; ஸ்ரீ விக்கிரம ராஜ சிங்க அரசன் யார்;; சுத்த தமிழன் அவர்;; தமிழ் அரச குமாரர்கள் இந்த நாட்டை காலம் காலமாக அரசாண்டு வந்துள்ளனர்;
** தமிழ் அரசர்கள் ஏழு பேர் பொலநறுவையில் அரசாண்டுள்ளனர்;; எல்லாள மன்னன் அனுராதபுரியில் ஆட்சி செய்துள்ளான்;;
** அதனால் தமிழ் மக்களுக்கும் இந்த நாட்டில் போதுமான அளவு உரிமை இருக்கின்றது என்பதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்;;
** இதை ஒரு பிரச்சனையாக்கி தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களிடையே முறுகல் நிலை ஏற்படக் கூடாது;;
** சிங்களவர்கள் இங்கு வந்தது விஜயனின் வருகையோடு மட்டுமே;;
** தமிழர்களும் பல தரப் பட்ட விதங்களில் இங்கு வந்துள்ளனர்; அவர்களும் இங்கு இன விருத்தி செய்கின்றனர்;; அப்போ அவர்களின் நாடு எது::
** மாற்றுக் கருத்துக்கு இடமில்லாமல், அவர்களின் (தமிழர்களின்) நாடும் இந்த இலங்கைதான்;; அவர்களுக்கும் அந்த அபிமானம் இருக்கணும்;;
** நாம் “இலங்கை தமிழர்” “இலங்கை முஸ்லிம்கள்” என்று சொல்லும் திட சசங்கற்பம் இருக்க வேண்டும்;
** இது தனிச் “சிங்கள பெளத்த நாடு மட்டுமே” என்று கூறுவதால், தமிழர் முஸ்லிம்களின் அபிமானத்தை முற்றாக சிதைத்து விடுகின்றது;;
** இத்தகைய இனவாத பேச்சு இங்கிலாந்து அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகளில் இல்லை;;
** இதுக்கேற்ற விதமாக அரசியல் மட்டத்தில், அனைவருக்கும் சம உரிமை கிடைக்கும் வகையில், மாற்றங்கள் கொண்டு வரப் பட வேண்டும்;;
** இதை விட்டிட்டு, விக்கினேஸ்வரன் (மாத்தையா) பாராளுமன்றில் வந்து “கா – கூ” என்று கூச்சல் போட்டு, சுய நிர்ணயம் தேசீயம் அது இது என்று மீண்டும் இனவாத சூழலை உருவாக்குவதாகவே தெரிகின்றது;;
** இந்த கூச்சலால் சிங்கள மக்கள் சூடேறிப் போய் உள்ளனர்;; சிங்கள நாடு பறி போகப் போகின்றது என்று பதறிப் போய் உள்ளனர்;;
** இப்போ செய்யப் பட வேண்டியது;; “தமிழ் முஸ்லீம் சிங்களம் என்ற மூவினங்களும் உரிமையுடனும் மதிப்புடனும் வாழும் வகை”யை உருவாக்குவது;; இன்றேல் இலங்கைக்கு விமோசனம் இல்லை;;
(மொழி பெயர்ப்பு – அருண் செல்லப்பா)