பாலியல் பலாத்காரமும் மானிட மனோநிலையும்!…..பகுதி…2… ( கட்டுரை )…. சங்கர சுப்பிரமணியன்.

இன்னும் சற்று விரிவாகவே இந்த கற்பழிப்பு அல்லது பாலியல் பலாத்காரம்
எப்படியெல்லாம் நடக்கிறது என்பதைப் பார்ப்போம். இரவு நேரங்களில் ஆளில்லாத பேருந்தில் தனியாக செல்வது, தனித்திருக்கும் நகர்ப்புறப் பகுதிக்கு இரவில் தனியாக ஒரு வாடகை வாகனத்தில் செல்வது, வேலியே பயிரைமேயும் படியான காவலர்களிருக்கும் காவல் நிலையத்தில் இருப்பது போன்று எத்தனையோ சந்தர்பங்களில் பாலியல் பலாத்காரம் நடக்கிறது.
இப்படியெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கும்போது பாலியல் பலாத்காரம் நடப்பதுபோல் இராணுவத்தில் உளவுத்துறை மற்றும் போர்க்கைதிகளை அடைத்து வைக்கும் இராணுவ முகாம்களிலும் நடக்கிறது.பாலியல் பலாத்காரம் தனித்தோ அல்லது கூட்டாகவோ போர்க்கைதிகளாக இருக்கும் பெண் போராளிகள் மேல் நடக்கிறது. ஒரு பெண் இவ்வாறாக மூன்று அல்லது நான்கு இடங்களில் பலரால் பாலியல் பலாத்காரந்துக்கு உட்படுத்தப் படுகிறாள்
தனியாக சூழ்நிலையால் ஆண்களிடம்
மாட்டிக் கொள்வது உட்பட
போர்க்காலங்களில் எதிரிப்படையினரிடம் அகப்படும் பொதுமக்களிலுள்ள பெண்கள்,
சூழ்நிலையால் விபச்சாரத்தில் தள்ளப்பட்டு விரும்பியோ விரும்பாமலோ அகப்பட்டுக் கொள்வது. அடுத்து இராணுவத்தினரிடம் போராளியாக சிறைபடுவது. இந்த மூன்றிலும் கொடுமைகளை அனுபவிக்கும் பெண்களின் நிலைதனைப் பார்ப்போம்.
சூழ்நிலையால் தனிமையில் சிக்கிக் கொள்ளும் பெண்ணுக்கு பாலியல் பலாத்காரம் நடைபெறும் என்பதே இவர்களுக்குத் தெரியாது. இவளிடம் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்கள் தங்களது காம இச்சையை வெறித்தனமாக தீர்த்துக் கொள்கிறார்கள். இந்த விபத்துக்குள்ளாகும் பெண்கள் அனுபவிக்கும் துன்பம் மிகக் கொடுமையானது. பெரும்பாலும் உடலுறவைப்பற்றி அதிகமாக அறிந்திடாத இளம்பெண்களுக்கே நடைபெறுகிறது.
அடுத்ததாக போர்க்காலங்களில் எதிரியிடம் தப்பிக்கமுடியாது அகப்படும் பெண்களுக்கு நிகழும் பாலியல் பலாத்காரமும் மிகக் கொடுமையானதே.
இப்படிப்பட்ட பெண்கள் விபச்சாரத்தில் தள்ளப்படும் பெண்கள் மற்றும் இராணுவ முகாமில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படும் போராளிகளை விட உடலளவிலும் மனதளவிலும் பெரிய பாதிப்பை அடைகிறார்கள் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அதனாலேயே மீட்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போதே மாண்டுபோகிறாள். ஒருவேளை உயிர் பிழைத்தாலும் நடைபிணமாகவே வாழ்கிறாள்.
அடுத்ததாக விபச்சாரத்தில் தள்ளப்படும் பெண் விரும்பியோ விரும்பாமலோ அத்தொழிலில் ஈடுபட நேர்கிறது. இங்கும் ஒன்றுக்கு மேற்பட்டோர் ஈடுபட்டாலும் அவள் அனுமதித்தே எல்லாம் நடக்கிறது. அதிலிருந்து விடுபட விரும்பினாள் அத்தொழிலில் இருந்து அவள் வெளியேறி
விடலாம்.தற்கொலை செய்வது நல்ல முடிவல்ல என்றாலும் அவள் அந்த வாழ்க்கையில் இருந்து விடுபட விரும்பினால் தன் வாழ்க்கையை எப்படியாவது முடித்திருப்பாள்.
விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு நடைபெறுவதை பாலியல் பலாத்காரம் என்று எப்படிச் சொல்லமுடியும்? என்று கேட்கலாம். அவளை அத்தொழிலில்
ஈடுபடுத்த அவள்மீது பாலியல்
பலாத்காரத்தை பலவழிகளில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கலாம். அவள் நம்பி வந்தவர்கள் அவளை சீரழித்து இப்புதைகுழியில் தள்ளியிருக்கலாம். நாளடைவில் இதுதான் நமக்கு கிடைத்த வாழ்க்கை என்று அதையே ஏற்று வாழலாம். யாரும் விரும்பி இத்தொழிலை ஏற்க மாட்டார்கள் என்பது என் அபிப்பிராயம்.
கடைசியாக இராணுவமுகாமில் இருக்கும்
பெண்போரளி. இங்கு நடைபெறும்
பாலியல் பலாத்காரம், நான் முதல் இரண்டு
சூழ்நில்களில் குறிப்பிட்ட பெண்ணுக்கு காம இச்சையை தீர்த்துக் கொள்பவர்கள் உடல் ரீதியாக ஏற்படுத்தும் அளவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்பது என் கருத்து. இதற்கு முரண்படுபவர்கள் இருக்கலாம். என் பார்வையில் அதன் காரணத்தைக் கூறுகிறேன். இங்கு காம இச்சையைவிட அப்போராளியை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கும்.
மேலும் சிறைபிடிக்கப்படும் பெண்
போராளிகளுக்கு அவர்களுக்கு கொடுக்கப்படும் பயிற்சியின் போதே எதிரி இராணுவத்திடம் பிடிபட்டால் என்னென்ன நடக்கும் என்பது கற்பிக்கப்பட்டு நன்றாகவே தெரிந்திருக்கும். உடல் ஊனமாவதிலிருந்து உயிர்போகும்வரை எல்லாமே தெரியும். அதற்கு தகுந்தாற்போல் மனவலிமையை வளர்த்துக் கொள்வார்கள். அப்படிஒரு சித்திரவதையை வேண்டாதவர்கள் தன் உயிரை மாய்த்துக் கொள்வார்கள். அவர்கள் தாம்கொண்ட இலட்சியத்துக்காக எதையும் ஏற்க துணிந்து தம்மை நாட்டுக்காக அர்ப்பணிப்பவர்கள். நாம் அவருக்காக வருந்துவதையோ பரிதாபப்படுவதையோ இழுக்காகக்கூட நினைப்பார்கள். ஆணோ பெண்ணோ அவர்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்த தியாகிகள் என்றே வைத்து போற்றப்படுபவர்கள்
உளவுத் தொழிலும் இராணுவத்தில் ஓர் அங்கம். அப்படி நாட்டிற்காக எதிரிநாட்டிலே புகுந்து நம்பிக்கையை பெறுவதற்காக கற்பையே விலையாக கொடுத்து உளவுபார்க்கும் பெண் உளவாளிகள் உள்ளனர். ஒருவேளை அப்படி உளவு பார்க்கும்போது மாட்டிக்கொள்ளும் நிலைவந்தால் தம்மையே மாய்த்துக் கொள்வார்கள். ஒருவேளை கையும் களவுமாக அகப்பட்டுக் கொண்டால் அவர்களுக்கு ஏற்படும் அனுபவம் பெண் போராளிகளுக்கு ஏற்படுவதைவிட அதிகமாக இருக்கும். ஏனென்றால் பெண் போராளி எதிர்த்து நின்று போராடுபவள். ஆனால் உளவாளி அப்படியல்ல கூடவே இருந்து நம்பிக்கையூட்டி துரோகம் இழைத்திருப்பதால் அவர்களுக்கு பாலியல் பலாத்காரம்கூட படுமோசமாக இருக்கும்.
இது எல்லாம் வெட்ட வெளிச்சமாக எல்லோருக்கும் தெரியும். இவ்வாறு போரில் இறக்கலாம் எதிரிகளால் சிறைபிடிக்கப் படலாம். ஆண்போராளிகளுக்கு தாங்கொனா பலாத்காரமும் பெண்போராளிகளுக்கு பாலியல் பலாத்காரமும் நிகழலாம் என்பதை அறிந்தே போராளியாக போர்புரிய உடன்பட்டிருக்கிறார்கள். இப்போது
பாலியல் பலாத்காரத்தை ஒருவரிடமிருத்தோ அல்லது கூட்டுப் பலாத்காரமாகவோ அனுபவித்த
பெண்களில் யார் பரிதாபத்துக்கு உரியவர்கள்? என்று எண்ணிப்
பாருங்கள், உங்களுக்கே ஓரளவு புரியும்.
எல்லா சூழலிலும் பாலியல் துயரங்களை எதிர்கொண்ட பெண்களின்நிலை பொதுவாக துன்பம் நிறைந்ததே என்பது
வேறு சமாச்சாரம்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()