கதைகள்

வாயை கொடுத்து மாட்டிக்கிட்டான்!…. ( குட்டிக்கதை )… சங்கர சுப்பிரமணியன்.

ஒருவன் பாசிமணி விற்கும் நரிக்குறவனிடம் மட்டமாக பேசினான். அதற்கு நரிக்குறவன்,

“அப்படி எல்லாம் பேசாதீங்க சாமி, உங்கள விட நாங்க எவ்வளவோ மேலுங்க,சாமி”என்றான்.

“அப்படியா! எங்கள விட எந்தவகையில மேல் சொல்லு பார்ப்போம்”

“சொல்லுறங்க சாமி. நாங்க குருவி சுடுவோம் கொக்கு சுடுவோமுங்க சாமி. உங்கள போல காந்திய சுடமாட்டோம் இந்திரா காந்திய சுடமாட்டோமுங்க சாமி” என்றுசொல்ல, மட்டமாக பேசியவன் அமைதியானான்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *