கவிதைகள்

உணர்ந்தோர் உணர்த்துவீரே!… ( கவிதை )… சங்கர சுப்பிரமணியன்.

எதிரே குடியிருக்கும் இனிமையான குடும்பம்தான்
பல்லாண்டாய் குடியிருக்கும்
பண்பான குடும்பம்தான்
அன்னையை ஆராதிக்கும் அழகான குடும்பம்தான்

அன்றொரு நாள் என் அன்னையவள்
அவன் எதிரே வருதல் கண்டான்
சட்டென வீட்டினுள் புகுந்தான்
சகுனம் சரி இல்லையென

காக்கைக்கும் தன் குஞ்சு பொன்
குஞ்சாயிற்றே
என்றோ என் தந்தை மறைந்ததற்கு
இன்றும் அன்னை அமங்கலியாம்
இன்றோ என் நெஞ்சு இன்னும் வலிக்கிறதே

மற்றொரு நாள் முக்கியவேலை
வெளியே செல்லவிருந்தேன்
எதிர் வீட்டு அம்மையாரை
என் எதிரே வரக்கேட்டேன்
அவரும் கணவனை இழந்தவர்தான்
அவர் எதிரே வந்திடவே
நானும் வெளியே சென்றேன்

மாலை நான் வீடு திரும்பி
வந்தேன்
என் அன்னை கண்கள்
கண்ணீர் உதிர்க்கக் கண்டேன்
என்னை அணைத்து உச்சிமுகர்ந்தாள் தாய்
நான் உணர்ந்தேன்
தாயவள் உணர்வினை
உணர்ந்தோர் மற்றவர்க்கும் உணர்த்துவீரே!

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *