திரும்பிப்பார்க்கின்றேன் அங்கம் -04…. முருகபூபதி.

இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா வரையில்…!
முருகபூபதி
கடந்த 2019 ஆம் ஆண்டு முற்பகுதியில் லண்டன் பயணமாகியிருந்தேன். அச்சமயத்தில் லண்டன் தமிழ் வானொலியின் மகரந்தச்சிதறல் நிகழ்ச்சிக்காக ஸ்கைப் ஊடாக வழங்கப்பட்ட நேர்காணலை, திரும்பிப்பார்க்கின்றேன் தொடரின் 05 அங்கமாக இங்கு சமர்ப்பிக்கின்றேன்.
லண்டன் தமிழ் வானொலியின் இயக்குநர் திரு. நடா மோகன், அவர்களின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியான மகரந்தச்சிதறல்களை தொகுத்து வழங்குபவர், ஈழத்தின் மூத்த எழுத்தாளர் ( அமரர் ) எஸ். அகஸ்தியரின் புதல்வியும் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான திருமதி நவஜோதி யோகரட்ணம்.
https://www.youtube.com/watch?v=h26ckNdirpE
1970 ஆம் ஆண்டு முதல் தொடங்கிய எனது பத்திரிகை ஊடகத்துறை , மற்றும் இலக்கியப்பிரவேசம் , புகலிட வாழ்வு பற்றிய நீண்ட கதையை இந்த நேர்காணலில் சமர்ப்பிக்கின்றேன்.
லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் தமிழ் வானொலியின் 499 ஆவது தொடரே இந்த மகரந்தச்சிதறல்.
இலக்கியம், ஊடகம், சமூகம், எழுத்தாளர்கள், கல்வி சார்ந்த தன்னார்வப்பணிகள் பற்றிய தகவல்களின் தொகுப்பு.
![]()