இறைவனின் கோபம்..!
>> புழுவின் கோபம்
>> திமிர்தலோடு சரி…
>> பறவையின் கோபம்
>> கீறுதலோடு சரி…
>> மிருகத்தின் கோபம்
>> முட்டுதலோடு சரி…
>> மனிதனின் கோபம்
>> அன்றோடு சரி….
>> இறைவனின் கோபம்
>> என்று முடியுமோ..?
>>
>> இறைவா….!
>>
>> உன் கோபத்தின் உச்சம்-
>> கோயிலை மூடினாய்…
>> மசூதியை மூடினாய்..
>> ஆலயத்தை மூடினாய்…
>> வீடுகளை மூடினாய்….
>> உலகையே மூடினாய்…!
>>
>> ஆம்;
>>
>> உழைப்பை நிறுத்தினாய்….
>> ஊதியத்தை நிறுத்தினாய்…
>> பழகுதலை நிறுத்தினாய்…
>> ஒருவரை ஒருவர்-
>> பார்த்தலையும் நிறுத்தினாய்..
>> மொத்தத்தில்-
>> இயக்கத்தையே நிறுத்தினாய்…!
>>
>> இறைவனே…!
>> தவறுதான்…!
>>
>> ஆணவம் அடைந்தோம்..
>> கர்வத்தில் மிதந்தோம்…
>> உண்மையை மறந்தோம்…
>> நன்மையை மறந்தோம்….
>> பொதுநலம் மறந்தோம்….
>> சுயநலம் மிகுந்தோம்…
>> தவறுதான்…!
>>
>> இறைவா….!
>>
>> புனிதம் துறந்தோம்…
>> மனிதம் மறந்தோம்…
>> ஊரை மறந்தோம்..
>> உறவை மறந்தோம்…
>> பெற்றோரையே-
>> மதிக்க மறந்தோம்..
>> இறைவா உன்னையே-
>> துதிக்க மறந்தோம்…!
>>
>> தவறுதான்….
>> தவறேதான்…!
>>
>> கூட்டுக்குள் முடங்கிய
>> புழுவினைப் போலே
>> வீட்டுக்குள் முடங்கினோம்..
>>
>> கண்ணுக்குத் தெரியா இறைவனே…!
>> உள்ளுக்குள் எங்களை சிறை வைத்தாயே….
>> மண்ணுக்குள் எங்களைப்
>> புதைத்தது போலே….!
>>
>> இறைவா…!
>>
>> இதுபோல தண்டனையை
>> நீ தந்ததில்லை…
>> முந்தைய
>> இதுவரை கண்டதில்லை…!
>>
>> உணர்கிறோம்…
>> கொரோனாவின்காரணத்தை
>> உணர்கிறோம்…
>>
>> எம்–
>> பாவத்தை மன்னித்துக் கொள்….!
>> உன்-
>> கோபத்தை முடித்துக் கொள்..!