Featureநேசம் நாடும் நெஞ்சங்கள்

யாழ்ப்பாணம் சிறுவர் அபிவிருத்தி நிலையம் வழங்கும் உதவி!

உலகெங்கும் தோன்றியிருக்கும் கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலினால், இலங்கையின் வடபுலத்திலும் நிலவும் ஊரடங்கு உத்தரவு மற்றும் அசாதாரண சூழ்நிலைகளையடுத்து, அன்றாடம் தேவைப்படும் உலர் உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் நலிவுற்ற மக்களுக்கு உதவும் பணியில், யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையம் ஈடுபட்டுவருகிறது.

குறிப்பிட்ட தன்னார்வ அமைப்பும், அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தொடர்பாளர் அமைப்பாகும்.

நீண்டகாலமாக வடக்கிலிருந்து இயங்கிவரும் யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையம் பதிவுசெய்யப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும்.

முன்னர் நீடித்த போரினால் பெற்றவர்களை, குடும்பத்தின் மூல உழைப்பாளிகளை இழந்து, வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு, அவுஸ்திரேலியா – இலங்கை மாணவர் கல்வி நிதியம் மற்றும் இங்கிலாந்து, மலேசியா முதலான நாடுகளிலிருந்தும் தன்னார்வ அமைப்புகளின் ஆதரவுடன் உதவி வருகின்றது.

அண்மையில் எதிர்பாரதவகையில் தோன்றியிருக்கும் அசாதாரண நிலைமைகளினால், ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் வேளைகளில், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் வதியும் நலிவுற்ற மக்களின் தேவைகளின் நிமித்தம் உலர் உணவுப்பொதிகளை வழங்கிவருகிறது.

இலங்கை மாணவர் கல்வி நிதியம் மாணவர்களுக்காக வழங்கிய 2020 ஆம் ஆண்டிற்கான முதல் காலாண்டு நிதியுதவியை தாமதமின்றி வழங்கியிருக்கும் யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தைச்சேர்ந்த தலைவர், மற்றும் பரிபாலன சபை உறுப்பினர்களும் பணியாளர்களும் தற்போது உலர் உணவுப்பொதிகளை வீடு வீடாகச்சென்று வழங்கி வருகின்றனர்.

இந்த மனிதாபிமான சேவைகளுக்கு உதவ விரும்பும் அன்பர்கள், மனிதநேய அமைப்புகள், யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்துடன்(Centre for Child Development)

தொடர்புகொள்ளலாம். மேலதிக விபரங்களுக்கு:

திரு. யோகநாதன் + 94 77 723 8686

திருமதி லோகனா + 94 77 820 4963 cfcdeve@gmail.com

254, Kandy Road, Ariyalai, Jaffna. Srilanka

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.