இலக்கியச்சோலை

அப்பல்லோ!… ( நாவல் ) வெளியீடு.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் இரண்டாம் ஆண்டு புத்தகத் திருவிழா காரைக்குடி சுபலெட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாள் நிகழ்வில் எழுத்தாளர் அண்டனூர் சுராவின்  அப்பல்லோ என்கிற நாவல் வெளியிடப்பட்டது. இந்நாவலை எழுத்தாளர் எஸ்.பாலபாரதி வெளியிட, சந்திரகாந்தன் , எஸ்.டி.பாலகிருஷ்ணன், ஜீவானந்தம் இணைந்து பெற்றுக்கொண்டார்கள். முன்னதாக, நாவலை அறிமுகம் செய்து உரையாற்றிய சந்திரகாந்தன், ‘ஒரு மரணத்தின் கதை இது. கிரேக்க இதிகாசப் பாத்திரத்தின் வழியே ஒரு சமூகத்தின் அழித்தொழிப்பைப் பேசும் உருவகப் புனைவு. காதல், களவு, மர்மம், துப்பறிவு என இழைப்பின்னலால் சொல்லப்பட்ட இக்கதை தமிழ் வாசகர் பரப்பிற்கு ஒரு புது வரவு ‘ என்றார்.

பாரதி புத்தகாலயம் பதிப்பகம் வழியே வெளிவந்திருக்கும் இந்நாவல் நாவலின் தலைப்பாலும், பேசும் கருப்பொருளாலும் வாசகர் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *