இலங்கை

தமிழர் தாயகப் பிரதேசத்தில் நீதியைக் கொன்ற அரசிடம் எப்படி நீதியைப் பெறமுடியும்?;  நீதி வழங்கினால் ஒருமைப்பாடு தானாக மலரும்

ஈழத்தமிழினத்தின் இருப்பையும் தாயக தேசிய சுயநிருணய உரிமைக் கோட்பாட்டையும் நலிவடையச் செய்தலே இலங்கை அரசின் நீதி என ஆகிவிட்டநிலையில், தேசிய ஒருமைப்பாட்டை நாங்கள் எங்கே தேடுவது என வன்னிமாவட்டஎம்.பி துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றில் இடம்பெற்ற நீதி மற் றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சி ன் குழுநிலை விவாதத்தில் உரையாற்று கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு என்ற இரண்டு தலைப்புகளிலும் ஓயாத போராட்டங்களை எதிர்கொள்ளும் ஒரு மாவட்டமே முல்லைத்தீவு. துறைதோறும் ஊறிய கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடைமுறைகளை எதிர்கொண்டவாறு. தொடர்ச்சியான நில ஆக்கிரமிப்பையும் மத ஆக்கிரமிப்பையும் எதிர்த்தவாறும் போராடியும் நீதிக்காக மீள மீள நீதிமன்ற வாசல்களில் தனியாகவும் குடும்பமா கவும் கிராமமாகவும் கிராமங்களாகவும் காத்திருக்க, அந்த நீதிமன்றத்து நீதிபதியே நீதியை நிலைநாட்ட இயலாது உயிர்ப்பாது காப்புக்காக வெளிநாட்டில் அடைக்கலம் புகும் அளவுக்கே எங்கள் மண்ணில் நீதியும்
தேசிய ஒருமைப்பாடும் செயலளவில் நிலைகொண்டது.

பிரித்தானியரிடம் இருந்து இந்தத்தீவு கைமாற்றப்பட்ட பின்னர், கடந்த 78 ஆண் டுகாலப் பெருவெளியிவே இப்போது நாம் விவாதித்துக்கொண்டிருக்கும் தேசிய ஒருமைப்பாட்டை சீர் குலைத்தவாறு தான் ஈழத்தமிழினம் மீது பல்வேறு இனக்கல வரங்களும் அடக்குமுறைகளும் அரங்கே றின.

உயிர்களும் உடமைகளும் பொருளாதார வல்லமையும் நாசமாக்கப்பட்டன. நீதிக் காக அரசியல் வழியில், ஆயுத வழியில் போராட, இறுதிப்போரிலும் பன்னாட்டு போரியல் நீதியும் ஈழத்தமிழினத்தோடு சே ர்த்தே படுகொலை செய்யப்பட்டது.
இறுதிப்போரின் போதான இனப்படு கொலைக்கும் நீதியில்லை. நம்பி உங்களி டம் ஒப்படைத்த இன்று வலிந்து காணா மல் ஆக்கப்பட்டோராக இருக்கிறார்களா இல்லையா என்றும் தெரியாதிருக்கும் எங்கள் உறவுகளுக்கும் நீதியில்லை. இன் றளவும் எங்களுக்குத் துணை நின்ற எங் கள் அரசியல் கைதிகளின் விடயத்திலும்
நீதியில்லை. குருந்தூர் மலையிலும் நீ தியில்லை. செம்மலை கிழக்கு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாக முன்றிலிலும் நீதியில்லை.

1948 இல் இருந்து இப்போது வரை, இனக்கலவரம், அடக்குமுறை, படுகொ லைகள் ஊடாகவும் முப்படையினர், தொல்லியல், வனவளம், வனசீவராசிகள் திணைக்களங்கள், மகாவலி அதிகாரச பை என அரசின் அனைத்து கட்டமைப் புகள் ஊடாகவும் ஈழத்தமிழினத்தின் இருப்பையும் தாயக தேசிய சுயநிருணய உரிமைக் கோட்பாட்டையும் மேலும் நலிவடையச் செய்தலே இலங்கை அரசின் நீதியாக இன்று வந்துவிட்டது. இவ்வகை யான காலப்பெருவெளியில் தேசிய ஒரு மைப்பாட்டை எங்கே நாங்கள் தேடுவ நீதிமன்ற உத்தரவை மீறி, படையினர் பாதுகாத்து நிற்க, செம்மலை கிழக்கு நீ ராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கே ணியோரம் பௌத்த பிக்குவின் உடலத்தை எரித்தபோதும் நீதிமன்ற உத்தரவை மீறி குருந்தூர் மலையில் விகாரையை நிறுவிய போதும் அரசே, முல்லைத்தீவில் நீதியைக் கொன்றது. இப்போது பிரதேச, மாவட்ட ஒருங்கிணைப்புத் தீர்மானங்களை மீறி தனி யார் காணியில் உப்பளம் அமைக்க அனு மதி கொடுத்ததும் அல்லாது அமைச்சரின், மாவட்டச் செயலாளரின், பிரதேச செய லாளரின் உத்தரவுகளையும் புறந்தள்ளி தொடர்ச்சியாக தனியார் காணியில் கொக் குத்தொடுவாயில் உப்பள நிருமாணத்துக்கு துணைநிற்கும் மகாவலி அதிகார சபையும் கூட முல்லைத்தீவில் நீதியைக் கொன்றது.

ஒவ்வொன்றுக்கும் குடிமகன் சட்டத்தர ணியைப் பிடித்து அரசுக்கு எதிராக வழக் காட வேண்டும் என்றால் அத்தகைய அரசு எத்தகையது. காடழித்தவர்களை கண்டுபி டிக்க வக்கற்ற வனவளத்திணைக்களம் செ ரந்தக்காணியைத் துப்புரவாக்கும் தமிழர்க ளுக்கு வழக்கு போடுகிறது. சாகும் வரை மக்கள் நீதிக்காகவும் வாழ்வுக்கும் வாழ்வா தாரத்துக்காகவும் காத்துக்கொண்டிருப்பதே தான் இந்த மண்ணின் நீதியா? யது.

இந்த வடகிழக்கில் நூற்றுக்கணக்கான தந்தையர்கள், தாய்மார்கள், பிள்ளைகள், மனைவியர் என ஈழத்தமிழனமே இந்த அர சிடம் இனப்படுகொலைக்கும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காகவும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் நீதிக்காக காத்திருக்கிறது.

இவற்றுக்கான நீதியை முழுமூச்சில் இந்த அரசாங்கம் வழங்கினாவே தேசிய ஒருமைப்பாடும் நல்லிணக்கமும் தானாக இந்த மண்ணில் மலர்ந்துவிடுமே!
காணாமல் போனோர் பற்றிய அலுவல கத்துக்கு 649 மில்லியன் ரூபாவும் இழப் பீடுகளுக்கான அலுவலகத்துக்கு 1091 மில்லியன் ரூபாவும் 2027ஆம் ஆண்டுக்காக மதிப்பிடப்பட்டுள்ளன.

இந்த நிதியின் மூலம் வன்னியின் மூன்று மாவட்டங்களிலும் எத்தனை குடும்பங்கள் பயன்பெறவுள்ளன. எத்தனை முறைப்பா டுகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் படும்? ஒவ்வொரு குடும்பமும் தமது முறைப்பாட்டின் முன்னேற்றத்தை தமிழில் எழுத்துமூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய நடைமுறை ஏற்படுத்தப்படுமா?எனக் கேள்வி எழுப்பினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *