விண்வெளியில் நிலவு தோன்றி மறையும் அற்புத காணொளியை பகிர்ந்த நாசா விஞ்ஞானி

விண்வெளியில் எடுக்கப்படும் அரிதான காணொளிகளை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, மக்களுக்கு பல்வேறு தகவல்களை அளித்து வரும் அனில் மேனன் என்ற நாசா விஞ்ஞானி தற்போது பகிர்ந்த காணாளி வைரலாகியிருக்கிறது.
சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து, நிலவு தோன்றுவதும், மறைவதும் பதிவான காணொளியை அவர் வெளியிட்டுள்ளார்.பொதுவாக பூமியிலிருந்து நாம் பார்க்கும் காட்சியை, இந்த காணொளி, விண்வெளியிலிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னணியில் இருப்பது பூமியின் நீல நிறம்.
விடைபெறும் நிலவு, வணக்கம் நிலவு
விடைபெறும் நிலவு, வணக்கம் நிலவு என்று பொருள்படும் வகையில் ஆங்கில வார்த்தைகளை இணைத்து இரண்டு காணொளிகளை ஒன்றாக பகிர்ந்துள்ளார்.
அதில், நிலவு தோன்றுவதும், படிப்படியாக வானிலிருந்து மறைவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக சூரிய உதயங்களைத்தான் மக்கள் அதிகம் ரசித்துப் பார்த்திருப்பார்கள். இங்கே நிலவு தோன்றி மறைகிறது.
குறித்த அனில்மேனன் என்ற விஞ்ஞானி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
![]()