பலதும் பத்தும்

‘டித்வா’ பேரிடர் ஏற்பட்டு இன்றுடன் ஓராண்டு

நாட்டின் பல பகுதிகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய ‘டித்வா’ பேரிடர் ஏற்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைகின்றது.

கடந்த வருடம் இதேபோன்றதொரு நாளில் இலங்கைக்கு தெற்கே, கடற்பகுதியில் உருவான தாழமுக்க மண்டலம் பின்னர் வலிமைமிக்க சூறாவளியாக வலுவடைந்தது.

இந்தப் பேரிடரில் 650க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், 173 பேர் காணாமல் போயினர்.

மேலும், 30 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டதுடன், ஒரு இலட்சத்து 13 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளும் சேதமடைந்தன.

இந்நிலையில், டித்வா’ இயற்கைப் பேரிடர் நிகழ்ந்து ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு, தேசிய சர்வமத நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றும், நாளையும் பதுளையில் நடைபெறுகின்றன.

ஊவா மாகாண சபை, பதுளை மாவட்டச் செயலகம் மற்றும் அரசியல் அதிகாரிகளின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன்போது, பல்வேறு மத வழிபாட்டு நிகழ்வுகள், நினைவு அஞ்சல் முத்திரை வெளியீடு மற்றும் சிறப்பு நூல் வெளியீடு ஆகியன இடம்பெறவுள்ளன.

பேரிடரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் வழிபாட்டு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

தேசிய சர்வமத நிகழ்விற்கு இணையாக நினைவு முத்திரை வெளியிடுதல் மற்றும் சிறப்பு நூல் வெளியீடு என்பனவும் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *