இலங்கை

தையிட்டி விகாரைக்கு எதிராக மீண்டும் தொடர் போராட்டம் நேற்று ஆரம்பம்; இன்றும் முன்னெடுப்பு

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரியும், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் கையளிக்குமாறு வலியுறுத்தியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் இணைந்து மாதாமாதம் முன்னெடுக்கும் தொடர்ப் போராட்டம் நேற்றுத் திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் மீண்டும் ஆரம்பமாகி மாலை 6 மணி வரை நடாத்தப்பட்டது.

நேற்றைய போராட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்திப் பெளர்ணமி நாளான இன்று செவ்வாய்க்கிழமை காலை-07 மணி முதல் மாலை-06 மணி வரை தொடர்ப் போராட்டம் நடைபெறவுள்ளதாகவும் போராட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *