இலங்கை

மல்லாகத்தில் தனியாருக்குச் சொந்தமான 2.71 ஏக்கர் காணியை விடுவிக்கும் இராணுவம்; அரசாங்க அதிபரிடம் ஆவணம் கையளிப்பு

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மல்லாகம் கோணப்புலம் கிராமத்தில் (ஜே/214) தனியாருக்குச் சொந்தமான 2.71 ஏக்கர் காணியை உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான ஆவணம், பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேணல் நிசங்கவினால் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் நேற்று யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன், உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்சினி மற்றும் இராணுவ அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *