இலங்கை

அமெரிக்காவுக்கான தூதுவராக அருணியை களமிறக்கும் இலங்கை

இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, அமெரிக்காவுக்கான இலங்கையின் முதலாவது பெண் தூதராக நியமிக்கப்படவுள்ளார்.

இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

வொஷிங்டன் டி.சி.யில் இலங்கையின் உயர்மட்ட இராஜதந்திரப் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை அருணி ரணராஜா படைக்கவுள்ளார்.

சிரேஷ்ட இராஜதந்திரியான அருணி ரணராஜா, தற்போது வெளிவிவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளராகப் பணியாற்றி வருகின்றார்.

இதற்கு முன்னர் நெதர்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

அவர் புதிய பதவியில் பொறுப்பேற்கும் திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *