இலங்கை

எங்களின் கடல் வளத்தை நாசமாக்கி வடக்கில் சூறையாடிய 300 மில்லியன் டொலர்!

வடக்கில் சட்டவிரோத கடற்றொழில் முறைகளைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன் ஏற்றுமதி ஊடாகவே நாட்டிற்கு 300 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக வன்னிமாவட்ட எம்.பி துரைராசா ரவிகரன் தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2027ஆம் ஆண்டுக்காக வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த

அவர் மேலும் பேசுகையில்,

மீன்பிடிக்கைத்தொழில் தொடர்பாக, ஏற்றுமதியில் 300 மில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கான வருமானம் பெறப்படுவதாக வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதியால் குறிப்பிடப்பட்டது. மேலும் 2030ஆண்டளவில் இந்த ஏற்றுமதி வருமானத்தை 600 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.

தேசியநீர் வாழ் வளங்கள் ஆராய்ச்சி மற்றம் அபிவிருத்தி முகவர் நிலையம் (நாரா) இலங்கையின் கடற்பரப்பில் 2014 ஆம் ஆண்டு தொடக்கம் மீன்வளம் படிப்படியாக குறைவடைந்து வருவதாக தெரிவித்துள்ளது.

வடக்கு கடல் பரப்பில் இவ்வாறான மீன்வள வீழ்ச்சிக்கு உள்ளூர் சட்டவிரோத தொழில்முறைகளும் இந்திய இழுவைப்படகுகளுமே முக்கிய காரணங்களாக அமைகின்றன. இவ்விரண்டையுமே கடற்றொழில் அமைச்சாலும் கடற்படையினராலும் இன்னமும் கட்டுப்படுத்த இயலாதுள்ளது.

இவ்வாறு சட்டவிரோத தொழில் முறைகளில் ஈடுபடுவோர் கைதுசெய்யப்பட்டு அவர்களுக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்படும் தண்டனையும் போதிய அளவில் இல்லாதுள்ளது.

நாட்டின் ஏற்றுமதிக்கு பங்களிக்கும் மீன்பிடியில் பெருமளவு, குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத தொழில் முறை ஊடாக பெறப்படுவதையே சமகால நிலைமைகள் எடுத்துக்காட்டுகின்றன. இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் முறைகளைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன் ஏற்றுமதி ஊடாகவே நாட்டிற்கு 300 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளது

சட்டவிரோத தொழில்முறைகள் ஊடாக செல்வந்தர் மேலும் செல்வந்தர் ஆதலும் வறுமைப்பட்டவர் மேலும் வறுமைப்பட்டு பட்டினிச்சாவை எதிர்கொள்ளலும் அடுத்துவரும் ஆண்டிலேனும் இவற்றை கட்டுக்குள் கொண்டுவரப்படவேண்டும். அதற்குரிய சட்டத்திருத்தங்களையும் கூடுதல் பொறிமுறைகளையும் அமைச்சும் படையினரும் மேற்கொள்ளவேண்டும் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *