இலங்கை

ராஜ் சோமதேவாவின் அறிக்கைக்கு எதிராக நாளை செம்மணியில் கண்டன ஆர்ப்பாட்டம்; யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முழு ஆதரவு

தொல்லியல் நிபுணர் ராஜ் சோமதேவாவின் செம்மணி தொடர்பான மூன்றாவது இடைக்கால அறிக்கை தொடர்பில் எழுந்துள்ள கேள்விகளுக்கும், ஆட்சேபனைகளுக்கும் வெளிப்படையானதும் அறிவியல் பூர்வமானதுமான பதில்கள் வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நீதிக்கான குரல் புறக்கணிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்திக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் நாளை செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் செம்மணிச் சந்தியில் முன்னெடுக்கப்படவுள்ள கண்டன ஆர்ப்பாட்டதுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

செம்மணி மனிதப் புதைகுழி என்பது வெறும் எலும்புக்கூடுகளின் தொகுப்பல்ல. அடையாளம் காணப்பட வேண்டிய மனிதர்களின் வாழ்வும், பதிலுக்காகக் காத்திருக்கும் குடும்பங்களின் கண்ணீரும், வெளிச்சத்துக்கு வர வேண்டிய உண்மைகளுமாகும்.

பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் பட்டங்களுக்காக மட்டுமல்ல சமூகத்தின் வலிகளையும் புரிந்துகொண்டு மனிதநேயத்துக்கும், நீதிக்கும் மதிப்பளிப்பவர்களாக இருக்க வேண்டும். வரலாறு நம்மிடம் கேட்கும் கேள்விகளுக்கு நமது நிலைப்பாடும் ஒரு பதிலாக இருக்கட்டும்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *