உலகம்

உக்ரைனின் கொடூரத் தாக்குதல்… ஜெலன்ஸ்கியைக் கொல்வதற்கான தடையை நீக்கிய புடின்

ஆத்திரமடைந்த புடின், ஜெலென்ஸ்கியைக் கொல்வதற்கான தடையை நீக்கினார்.

ரஷ்யாவின் முக்கிய மின் உற்பத்தி நிலையங்களை உக்ரைன் தொடர்ந்து தாக்கி வரும் நிலையில், கடும் கோபமடைந்த விளாடிமிர் புடின் ஜெலென்ஸ்கியைக் கொல்வதற்கான தடையை நீக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெலென்ஸ்கியைக் கொல்வதற்கு

 

இரவோடு இரவாக உக்ரைனின் ஒருங்கிணைந்த தாக்குதல்களில், 500-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் எண்ணெய் நிலையங்கள், ஒரு முக்கியமான பாலம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வளாகம் ஆகியவற்றைச் சூழ்ந்து தாக்கியுள்ளன.

இரண்டு வாரங்களாகத் தொடர்ந்த கடுமையான தாக்குதல்களை அடுத்து, இந்தத் தாக்குதல்கள் ரோஸ்டோவ் மற்றும் டாடர்ஸ்தானில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் பெரும் தீப்பிழம்புகளை ஏற்படுத்தின.

இந்த நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கூட்டத்தில் ஜெலென்ஸ்கியைக் கொல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த உத்தியோகப்பூர்வமற்ற தடையை நீக்குமாறு, கடும்போக்குடைய ரஷ்யப் பாதுகாப்புத் தலைவர்கள் புடினிடம் தீவிரமாகப் பரிந்துரைத்ததாக தகவல் கசிந்துள்ளது.

இதனையடுத்தே உக்ரைன் தரப்பில் இருந்து உக்கிரமானத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. பால்டிக் கடலில் அமைந்துள்ள ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி மையத்தின் மீது உக்ரைன் தொடர்ச்சியாக நடத்திய தாக்குதல்கள்,

தடுமாறிக்கொண்டிருக்கும் ரஷ்யாவின் பொருளாதாரத்திற்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு அருகிலுள்ள முக்கியத்துவம் வாய்ந்த உஸ்ட்-லூகா துறைமுகத்தின் மீதான சமீபத்திய தாக்குதல் இந்த முடிவுக்கு முதன்மை காரணமாக அமைந்ததுடன், புடினுக்கு ஒரு பெரும் அவமானமாகவும் பார்க்கப்பட்டது.

உக்ரைனின் கொடூரத் தாக்குதல்... ஜெலன்ஸ்கியைக் கொல்வதற்கான தடையை நீக்கிய புடின் | Raging Putin Chilling Ww3 Threat

 

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஜனாதிபதி விலாடிமிர் புடினின் சொந்த ஊராகும். உக்ரைன் தனது தொலைதூர ட்ரோன் தாக்குதல்களை அதிகரித்து வருவதால், இந்த மோதலின் போது அந்நகரம் தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.

அனுமதி அளிக்க வேண்டும்

 

மட்டுமின்றி, புடினின் சட்டவிரோதப் போருக்கு நிதியுதவி அளிப்பதில் உஸ்ட்-லூகா துறைமுகம் முக்கியப் பங்கு வகித்துள்ளது; இது சர்வதேசத் தடைகளைத் தவிர்ப்பதற்கும் ஆசியாவிற்கு எண்ணெயைக் கொண்டு செல்வதற்கும் ஒரு முக்கிய ஏற்றுமதிப் பாதையாகச் செயல்படுகிறது.

உக்ரைனின் கொடூரத் தாக்குதல்... ஜெலன்ஸ்கியைக் கொல்வதற்கான தடையை நீக்கிய புடின் | Raging Putin Chilling Ww3 Threat

 

இந்த நிலையிலேயே, ஜெலென்ஸ்கி மற்றும் முக்கிய உக்ரேனிய தளபதிகள், அதிகாரிகளை ஒழிப்பதற்கு புடின் அனுமதி அளிக்க வேண்டும் என ரஷ்யாவின் போர் வெறியர்கள் புடினிடம் கோரியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், ரஷ்யாவால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு படுகொலைச் சதித்திட்டமும் உலகை நெருக்கடியில் தள்ளக்கூடும், மேலும் அது மூன்றாம் உலகப் போருக்கு வித்திடும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும்.

உக்ரைனின் கொடூரத் தாக்குதல்... ஜெலன்ஸ்கியைக் கொல்வதற்கான தடையை நீக்கிய புடின் | Raging Putin Chilling Ww3 Threat

 

புடின் தலைமையில் நடைபெற்ற ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், ரகசியமாக இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன; அதில் பாதுகாப்புத் துறைத் தலைவர்கள், செயலற்ற தற்காப்பு வியூகம் பயனற்றது என்று வாதிட்டுள்ளனர்.

மட்டுமின்றி, கனரக ஹைப்பர்சோனிக் ஆயுதங்களைப் பயன்படுத்தி, உக்ரைனின் தலைவர்களின் பதுங்கு குழிகள் மற்றும் மோட்டார் அணிவகுப்புகளில் துல்லியமான தாக்குதல்களை நடத்துமாறு அவர்கள் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, ரஷ்ய அரசு சார்பு ஊடகம் ஒன்று, ஜெலென்ஸ்கி தொடர்பில் பாதுகாப்புப் பிரிவினருக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்; இல்லையெனில், நமது குடிமக்களின் உயிர்களையும், எரிந்து கொண்டிருக்கும் நமது தொழிற்சாலைகளையும் இழந்து கொண்டே இருக்க வேண்டியிருக்கும் என வெளிப்படையாக கோரிக்கை வைத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *