உலகம்

ஜென்சன் ஹுவாங் பதவி விலகல் ; என்விடியாவின் அடுத்த CEO யார்?

அமெரிக்காவின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியா (Nvidia), அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய தலைமை நிர்வாக அதிகாரியைத் தெரிவுசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நிறுவனத்திற்கு வெளியிலிருந்து ஒருவரைத் தெரிவுசெய்ய வேண்டும் என அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நிறுவனத்திற்குள் இடம்பெறும் சம்பவங்களைக் கருத்திற்கொண்டு, நிர்வாகத்தில் பெரிய மாற்றம் அவசியம் எனத் தெரிவித்த பெசென்ட், புதிய தலைவரைத் தெரிவுசெய்வதற்கான தேடலின்போது வெளிநபர் ஒருவரை நியமிப்பது குறித்து என்விடியா நிர்வாகக் குழு பரிசீலிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை முறையற்ற உறவுகள் தொடர்பான தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து ஜென்சன் ஹுவாங் பதவி விலகியதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் சீன உளவுத்துறை அதிகாரி ஒருவருடனான தொடர்பு குறித்த சந்தேகங்களும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளுக்கு இணங்குவது தொடர்பான என்விடியாவின் நிறுவனக் கலாசாரம் குறித்து எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு, நிறுவனத்தின் நிர்வாகக் குழுவும் வெளியக சட்ட ஆலோசகர்களும் அடுத்த 10 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் பெசென்ட் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், ஜென்சன் ஹுவாங்கிற்குப் பதிலாகப் புதிய தலைவரை நியமிப்பது தொடர்பில் என்விடியா நிர்வாகக் குழு பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, பிரிட்டிஷ் சிப் தயாரிப்பு நிறுவனமான ஆர்ம் ஹோல்டிங்ஸின் (Arm Holdings) தலைமை நிர்வாக அதிகாரி ரெனே ஹாஸை அணுகியுள்ளதாக ஃபைனான்சியல் டைம்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், புதிய தலைமை நிர்வாக அதிகாரி தொடர்பில் என்விடியா இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *