இலங்கை

மறைந்த முன்னாள் எம்.பி எம்.கே சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியை நாளை

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவருமான எம்.கே சிவாஜிலிங்கத்தின் இறுதிக் கிரியைகள் நாளை (16) நடைபெறவுள்ளது. அன்னாரின் உடல் வல்வெட்டித்துறை, நெடியகாட்டில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை மதியம் 12 மணியளவில் வல்வெட்டித்துறை சந்தியில் அன்னாரின் பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

பின்னர், வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்திற்கு அன்னாரது பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *