சீனாவின் எழுச்சியைக் கண்டு அஞ்சக்கூடாது – தென்கொரிய அமைச்சர் வலியுறுத்து

தென் கொரியா, சீனாவின் எழுச்சியைக் கண்டு அஞ்சவும் கூடாது, அதே சமயம் அதன் திறன்களைக் குறைத்து மதிப்பிடவும் கூடாது என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சோ ஹியூன் Cho Hyun அறிவித்துள்ளார்.
அடுத்த வாரம் சீனாவில் நடைபெறவுள்ள பிராந்திய உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர், “சீனாவிற்கான இந்த வருகையின்போது, சீனாவின் எழுச்சியைக் கண்டு தேவையற்ற அச்சம் கொள்ளக்கூடாது என்பதையும், அதன் திறன்களையும் ஆற்றலையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதையும் நான் உணர்ந்துகொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவின் மக்கள் மற்றும் நிறுவனங்களின் தன்னாட்சி மற்றும் படைப்பாற்றலைப் பயன்படுத்தி, இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையிலான ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
![]()