உலகம்

நேட்டோ உறுப்புரிமைக்கு ஈடாக டொன்பாஸை கேட்கும் வொஷிங்டன்

நேட்டோ உறுப்புரிமைக்கு ஈடாக டொன்பாஸின் சில பகுதிகளை உக்ரைன் விட்டுக்கொடுக்கும் யோசனையை வொஷிங்டன் முன்வைத்ததாக வோலோடிமிர் ஜெலென்ஸ்கி  தெரிவித்துள்ளார்.

ஆனால் கீவ் எந்தப் பகுதியையும் விட்டுக்கொடுக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரந்த ஐரோப்பிய பாதுகாப்புப் பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தி ரஷ்யா நேட்டோவை பலவீனப்படுத்தவும், கண்ட எல்லைகளை மாற்றவும், அமெரிக்கப் படைகளின் இருப்பைக் குறைக்கவும் கூடும் என்றும் ஜெலென்ஸ்கி   எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை உக்ரைன், ரஷ்யா இடையிலான அமைதி பேச்சுவார்த்தைகள் கட்டாரில் இடம்பெற்று வருகின்றன.

இதில் 1000 கைதிகளை பரிமாறிக் கொள்வதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *