உலகம்
ஈரானால் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்கா ட்ரோன்

ஹோர்முஸ் நீரிணைக்கு மேல் அமெரிக்காவின் MQ-1 பிரிடேட்டர் ட்ரோனைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது.
ஈரானிய ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளின்படி, ஹோர்முஸ் நீரிணைக்கு மேல் அமெரிக்காவின் MQ-1 பிரிடேட்டர் ட்ரோன் ஒன்றை ஈரான் கடற்படை சுட்டு வீழ்த்தியுள்ளது.
கோஸ்தாக் (Kohstak) பிராந்தியத்தில் உள்ள சிரிக் (Sirik) கடற்கரைப் பகுதியில் இந்த ட்ரோன் வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் பிராந்திய ஒருமைப்பாடு, கடல் எல்லைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதில் ஈரான் கடற்படை “ஒரு கணம் கூட தயங்காது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()